• Mar 05 2026

பேன் தொல்லையால் உயிரிழந்த சிறுமி-அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்!

Ziya / Feb 11th 2026, 9:17 am
image

https://www.facebook.com/share/v/1ECH9K4444/


ஒடிசா மாநிலம் பூரி பகுதியில், அளவுக்கு அதிகமான பேன் தொல்லை காரணமாக 6ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த சம்பவத்தில் லஷ்மி பிரியா என்ற சிறுமி, நீண்ட காலமாக கடுமையான பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


பேன்கள் காரணமாக தலையில் ஏற்பட்ட தொடர் அரிப்பால் பல இடங்களில் காயங்கள் உருவாகியிருந்தன. இந்நிலையில், சிறுமி திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.


பேன் தொல்லைக்கு எடுத்துக் கொண்ட மருந்துகளோ அல்லது தலையில் அரிப்பால் ஏற்பட்ட காயங்களில் ஏற்பட்ட நோய்த்தொற்றோ இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


பேன் தொல்லையால் உயிரிழந்த சிறுமி-அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம் https://www.facebook.com/share/v/1ECH9K4444/ஒடிசா மாநிலம் பூரி பகுதியில், அளவுக்கு அதிகமான பேன் தொல்லை காரணமாக 6ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்தில் லஷ்மி பிரியா என்ற சிறுமி, நீண்ட காலமாக கடுமையான பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேன்கள் காரணமாக தலையில் ஏற்பட்ட தொடர் அரிப்பால் பல இடங்களில் காயங்கள் உருவாகியிருந்தன. இந்நிலையில், சிறுமி திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.பேன் தொல்லைக்கு எடுத்துக் கொண்ட மருந்துகளோ அல்லது தலையில் அரிப்பால் ஏற்பட்ட காயங்களில் ஏற்பட்ட நோய்த்தொற்றோ இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement