ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள காவலரணில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள், திரவம் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இரண்டு பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஜிந்துபிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் சந்தேகநபர் ஒருவரின் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு இரண்டு பேர் இவர்களை பார்ப்பதற்காக காவல்நிலையத்துக்கு வருகைத் தந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கும் இதன்போது உறவினர்களால் உணவு வழங்கப்பட்டுள்ளது.
உணவை உட்கொண்டதன் பின்னர் சந்தேகநபர்கள் இரண்டு பேரும் சுயநினைவை இழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட திரவ உணவில் விசம் கலந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த திரவத்தை அருந்திய சந்தேகநபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரவம் அருந்தி சுயநினைவை இழந்த சந்தேகநபர்கள் - ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம் ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள காவலரணில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள், திரவம் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் இரண்டு பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஜிந்துபிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் சந்தேகநபர் ஒருவரின் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு இரண்டு பேர் இவர்களை பார்ப்பதற்காக காவல்நிலையத்துக்கு வருகைத் தந்துள்ளனர்.சந்தேகநபர்கள் இருவருக்கும் இதன்போது உறவினர்களால் உணவு வழங்கப்பட்டுள்ளது.உணவை உட்கொண்டதன் பின்னர் சந்தேகநபர்கள் இரண்டு பேரும் சுயநினைவை இழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட திரவ உணவில் விசம் கலந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த திரவத்தை அருந்திய சந்தேகநபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.