• Aug 29 2025

சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டியின் சடலம் மீட்பு! உயிர்மாய்ப்பா? கொலையா? விசாரணைகள் தீவிரம்

shanuja / Aug 28th 2025, 9:37 pm
image

மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்  மூதாட்டி ஒருவருடைய சடலம்  ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. 


புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டுதிட்டம் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


வீட்டில் தனிமையில் வசித்து வந்த கோபாலன் குண்டுமணி (வயது - 84) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தவராவார். 


மூதாட்டியின் சடலமொன்று இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.  


 சடலத்தை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே 2021ம் ஆண்டு நிதர்சனா என்ற இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில்  குறித்த பகுதியிலே உயிரிழந்தார். அதேபோலவே   மூதாட்டியின் சடலமும் அதேபகுதியில் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழப்பு  எவ்வாறு இடம்பெற்றது? கொலையா? மரணத்திற்கான காரணம் என்ன? பல்வேறு கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டியின் சடலம் மீட்பு உயிர்மாய்ப்பா கொலையா விசாரணைகள் தீவிரம் மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்  மூதாட்டி ஒருவருடைய சடலம்  ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டுதிட்டம் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில் வசித்து வந்த கோபாலன் குண்டுமணி (வயது - 84) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தவராவார். மூதாட்டியின் சடலமொன்று இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.   சடலத்தை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2021ம் ஆண்டு நிதர்சனா என்ற இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில்  குறித்த பகுதியிலே உயிரிழந்தார். அதேபோலவே   மூதாட்டியின் சடலமும் அதேபகுதியில் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழப்பு  எவ்வாறு இடம்பெற்றது கொலையா மரணத்திற்கான காரணம் என்ன பல்வேறு கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement