• Aug 28 2025

அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க பதவிக்கு நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு

Aathira / Aug 28th 2025, 6:29 pm
image

அஸ்கிரி  பீடத்தின் அனுநாயக்க பதவிக்கு  அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே  ஆனந்த தேரர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார் 

இதுவரையில் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கராக கடமையாற்றி வந்த வணக்கத்துக்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரர் காலமானதை தொடர்ந்து இப்பதவி வெற்றிடமாக காணப்பட்டது 

இதைத்தொடர்ந்து இந்த பதவிக்கான தேர்தல் அஸ்கிரி மகா மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஞானரதன தேரரின் தலைமையில் இன்று இடம்பெற்றது 

கண்டி - அஸ்திரிமா விகாரையில் வரலாற்று சிறப்புமிக்க உபோசிதகராயத்தில்  தேர்தல் இடம்பெற்றுள்ளது 

குறித்த தேர்தலில் அஸ்கிரிய மகா சங்க சபையின் 19 தேரர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்

அஸ்கிரி பீடத்தின் சிரேஷ்ட குழு உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய உருளேவத்த தம்மரக்கித தேரர் மற்றும் 

அஸ்கிரி பீடத்தின் சிரேஷ்ட பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் ஆகியோர் இந்தப் பதவிக்காக போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க பதவிக்கு நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு அஸ்கிரி  பீடத்தின் அனுநாயக்க பதவிக்கு  அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே  ஆனந்த தேரர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதுவரையில் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கராக கடமையாற்றி வந்த வணக்கத்துக்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரர் காலமானதை தொடர்ந்து இப்பதவி வெற்றிடமாக காணப்பட்டது இதைத்தொடர்ந்து இந்த பதவிக்கான தேர்தல் அஸ்கிரி மகா மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஞானரதன தேரரின் தலைமையில் இன்று இடம்பெற்றது கண்டி - அஸ்திரிமா விகாரையில் வரலாற்று சிறப்புமிக்க உபோசிதகராயத்தில்  தேர்தல் இடம்பெற்றுள்ளது குறித்த தேர்தலில் அஸ்கிரிய மகா சங்க சபையின் 19 தேரர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்அஸ்கிரி பீடத்தின் சிரேஷ்ட குழு உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய உருளேவத்த தம்மரக்கித தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் சிரேஷ்ட பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் ஆகியோர் இந்தப் பதவிக்காக போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement