• Nov 25 2024

செயலிழக்கும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை! சபையில் எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

Chithra / May 14th 2024, 12:45 pm
image

 

சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையிலுள்ள 322 அம்பியூலன்ஸ் வண்டிகளில் 56 வண்டிகள் செயழிலந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (14) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அம்பியூலன்ஸ் சேவையில் பணிபுரிந்த சாரதிகளும், அவசர சேவை உத்தியோகத்தர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அம்பியூலன்ஸைப் புதுப்பித்தல், ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தல் போன்றவற்றில் அரசாங்கத்தின் கவனம் குறைந்துள்ளமையினால், இது தொடர்பில் அவதானம் செலுத்தி, இதனை வீழ்ச்சிக்கு இட்டுச்செல்ல இடமளிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும்  2019/2020 காலப்பகுதியில் வெளியேறிய சுமார் 3000 பேர் தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000 பேர் நியமிக்கப்படவுள்ளனர். 

இந்த ஆட்சேர்ப்புகளை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இகோரிக்கை விடுத்தார்.


 

செயலிழக்கும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை சபையில் எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு  சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையிலுள்ள 322 அம்பியூலன்ஸ் வண்டிகளில் 56 வண்டிகள் செயழிலந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று (14) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அம்பியூலன்ஸ் சேவையில் பணிபுரிந்த சாரதிகளும், அவசர சேவை உத்தியோகத்தர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.அம்பியூலன்ஸைப் புதுப்பித்தல், ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தல் போன்றவற்றில் அரசாங்கத்தின் கவனம் குறைந்துள்ளமையினால், இது தொடர்பில் அவதானம் செலுத்தி, இதனை வீழ்ச்சிக்கு இட்டுச்செல்ல இடமளிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்  2019/2020 காலப்பகுதியில் வெளியேறிய சுமார் 3000 பேர் தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்புகளை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இகோரிக்கை விடுத்தார். 

Advertisement

Advertisement

Advertisement