• Dec 10 2025

தாஜூதீன் கொலை, ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மை வெளிவரும்! – ஜனாதிபதி திட்டவட்டம்

Chithra / Nov 19th 2025, 8:28 am
image


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மை வெளிவரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டமையினை, தாம் புலனாய்வாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபையில் வெளிப்படுத்தினார். 

அத்துடன், படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை, அரசாங்கம் வெளிக்கொணரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இருப்பினும், அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளது. 

இந்த நிலையில், ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மைகள் வெளிக்கொணரப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதற்காக இரவும் பகலும் உழைத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இதேவேளை அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.  ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும்  அவசியம் எமக்கு உண்டு. 

விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடித்த தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

இருப்பினும் அது இயலாமல் உள்ளது. அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அது மாத்திரமன்றி, 11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குற்றவாளி வெகுவிரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். சட்டத்தை சரியாக செயற்படுத்தும் போது இராணுவ பழிவாங்கள் என்று கோசம் எழுப்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும்  தொழில்நுட்ப அச்சுறுத்தல்களுக்கு, குறிப்பாக சைபர் வெளியில் எழும் சவால்களுக்குப் பதிலளிக்கும் திறன்கொண்ட பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், நாட்டின் கடல் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இதனிடையே, இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்கமைய, இந்தியா 70 ஜீப்களுடன் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. 

முப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதற்கும் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

அத்துடன், அமெரிக்கா 2026ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 T-57 உலங்கு வானூர்திகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

தாஜூதீன் கொலை, ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி திட்டவட்டம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மை வெளிவரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவிக்கையில் ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டமையினை, தாம் புலனாய்வாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபையில் வெளிப்படுத்தினார். அத்துடன், படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை, அரசாங்கம் வெளிக்கொணரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இருப்பினும், அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மைகள் வெளிக்கொணரப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதற்காக இரவும் பகலும் உழைத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.  ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும்  அவசியம் எமக்கு உண்டு. விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடித்த தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இருப்பினும் அது இயலாமல் உள்ளது. அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.அது மாத்திரமன்றி, 11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குற்றவாளி வெகுவிரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். சட்டத்தை சரியாக செயற்படுத்தும் போது இராணுவ பழிவாங்கள் என்று கோசம் எழுப்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்  தொழில்நுட்ப அச்சுறுத்தல்களுக்கு, குறிப்பாக சைபர் வெளியில் எழும் சவால்களுக்குப் பதிலளிக்கும் திறன்கொண்ட பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டின் கடல் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதனிடையே, இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்கமைய, இந்தியா 70 ஜீப்களுடன் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. முப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதற்கும் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா 2026ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 T-57 உலங்கு வானூர்திகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement