• Jan 19 2025

பிரிந்து சென்றவர்களை இணைக்க உள்ளக மட்டத்தில் பேச்சு; களத்தில் இறங்கிய நாமல்

Chithra / Jan 13th 2025, 8:33 am
image

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரிகள் திருத்தம் செய்யப்படுகிறது. 

பொருளாதார விவகாரத்தில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை அறிய முடியவில்லை.

மதுபான பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எனக்கொன்றும் பிரச்சினையில்லை, ஏனெனில் நான் மது அருந்துவதில்லை. 

மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரிக்கப்படும். அது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

மேலும்  பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு விலகிச் சென்றவர்கள் இன்று அரசியலில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். 

விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ராஜபக்ஷர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

ஆகவே எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு என தெரிவித்தார்.

பிரிந்து சென்றவர்களை இணைக்க உள்ளக மட்டத்தில் பேச்சு; களத்தில் இறங்கிய நாமல்  உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரிகள் திருத்தம் செய்யப்படுகிறது. பொருளாதார விவகாரத்தில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை அறிய முடியவில்லை.மதுபான பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எனக்கொன்றும் பிரச்சினையில்லை, ஏனெனில் நான் மது அருந்துவதில்லை. மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரிக்கப்படும். அது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.மேலும்  பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு விலகிச் சென்றவர்கள் இன்று அரசியலில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ராஜபக்ஷர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.ஆகவே எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement