• Jan 13 2025

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு - பொங்கல் கொண்டாடுவதில் சிக்கல்!

Chithra / Jan 13th 2025, 8:18 am
image


சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தோட்டப் பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் அரிசியிலிருந்து பால்சோறு தயாரிப்பது கடினம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

நாட்டின் பல பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக பச்சை அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. 

இருப்பினும் அரிசி பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததன் மூலம், 

ஒரு லட்சத்து 67,000 மெட்ரிக் டொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் அரிசி பற்றாக்குறை தீர்க்கப்பட்டது. 

இருப்பினும் தொடர்ந்து நிலவும் சிவப்பு அரிசி பற்றாக்குறை காரணமாக, தைப்பொங்கல் பண்டிகைக்கான சடங்குகளை செய்வதில் சிக்கல்கள் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு - பொங்கல் கொண்டாடுவதில் சிக்கல் சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தோட்டப் பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் அரிசியிலிருந்து பால்சோறு தயாரிப்பது கடினம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக பச்சை அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் அரிசி பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததன் மூலம், ஒரு லட்சத்து 67,000 மெட்ரிக் டொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் அரிசி பற்றாக்குறை தீர்க்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து நிலவும் சிவப்பு அரிசி பற்றாக்குறை காரணமாக, தைப்பொங்கல் பண்டிகைக்கான சடங்குகளை செய்வதில் சிக்கல்கள் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement