• Jan 26 2025

தமிழுக்கு முன்னுரிமை - இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி

TNA
Chithra / Jan 24th 2025, 2:28 pm
image


யாழில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளதையும் வரவேற்றுள்ள தமிழரசுக் கட்சி இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்று அமைக்கப்பட்டு யாழ்ப்பாண கலாசார நிலையம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலைமையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் இந்திய தூதுவர் மற்றும் இலங்கையின் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இதன் பெயரை மாற்றம் செய்தனர்.

அதாவது யாழ்ப்பாணம் என்ற சொல்லை தூக்கிவிட்டு திருவள்ளுவர் கலாசார மையம் என்ற புதிய பெயரை அறிவித்து இருந்தனர்.

ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி மீள்பலிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந் நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார மையம் என்பதாக மீண்டும் பெயரை மாற்றி உள்ளனர். அதேபோல தமிழிற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டும் இருக்கிறது.

இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நன்றி கூறி இந்திய தூதுவருக்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் கடிதமொன்றையும் இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தமிழுக்கு முன்னுரிமை - இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி யாழில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளதையும் வரவேற்றுள்ள தமிழரசுக் கட்சி இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்று அமைக்கப்பட்டு யாழ்ப்பாண கலாசார நிலையம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.இவ்வாறான நிலைமையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் இந்திய தூதுவர் மற்றும் இலங்கையின் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இதன் பெயரை மாற்றம் செய்தனர்.அதாவது யாழ்ப்பாணம் என்ற சொல்லை தூக்கிவிட்டு திருவள்ளுவர் கலாசார மையம் என்ற புதிய பெயரை அறிவித்து இருந்தனர்.ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி மீள்பலிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந் நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார மையம் என்பதாக மீண்டும் பெயரை மாற்றி உள்ளனர். அதேபோல தமிழிற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டும் இருக்கிறது.இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நன்றி கூறி இந்திய தூதுவருக்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் கடிதமொன்றையும் இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement