• Feb 07 2025

தமிழ்ப் பொதுவேட்பாளர்- கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழில் சந்திப்பு..!

Sharmi / Aug 24th 2024, 3:58 pm
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக இன்றையதினம்(24) யாழ் மாவட்ட கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

இச் சந்திப்பு நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், தமிழ் மக்கள் பொதுச் சபையைச் சார்ந்த நிலாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டு தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றியிருந்தார்கள்.  

தமிழ்ப் பொதுவேட்பாளர்- கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழில் சந்திப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகிறார்.இதன் ஒரு கட்டமாக இன்றையதினம்(24) யாழ் மாவட்ட கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், தமிழ் மக்கள் பொதுச் சபையைச் சார்ந்த நிலாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டு தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றியிருந்தார்கள்.  

Advertisement

Advertisement

Advertisement