• Aug 30 2026

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் மீதான தாக்குதலுக்கு தமிழக MLA சமூகம் செனட் மகா சபையிடம் முறைப்பாடு

dorin / Aug 29th 2026, 3:57 pm
image

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் மீதான தாக்குதலுக்கு தமிழக MLA சமூகம் செனட் மகா சபையிடம் முறைப்பாடு செய்யள்ளது.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் வணக்கத்துக்குரிய அன்டனி செபஸ்டியன் மீது நேற்று வெள்ளிக்கிழமை கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான போதகர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தென்னிந்தி திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக போதகர் செபஸ்டியன் அன்டனி கடந்த வருடம் டிசம்பர் மாதம் கவுன்சிலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு பல்வேறு விடயங்களில் இப்போதகர் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளரான சதீஸ் டானியல் அவர்களின் மகனால் குறித்த போதகர் தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நடைபெறும் போது, தாக்குதல் மேற்கொண்ட நபரின் தந்தையான JDCSI செயலாளர் போதகர் சதீஸ் டானியல், பேராயர் ஆகியோர் தடுக்காது இருந்தமை தொடர்பில் போதகர்கள் மற்றும் விசுவாசிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான போதகரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் பொதகர் குடும்பங்களிற்கான குடும்ப ஒன்றுகூடலும், வழிநடத்தல் தொடர்பான பயிற்சிகளும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இறுதி நாளான நேற்றைய தினமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதகர்களிற்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, போதகர்களின் ஓய்வூதியம், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, நிகழ்வு நடைபெற்று வந்த பகுதியில் தரித்திருந்த தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளரின் மகன் போதகரின் பின் தலைப்பகுதியில் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் காணப்படும் நிர்வாக குறைபாடுகள், நிதி முறைகேடுகள், திருச்சபை மக்கள் மீது மேற்கொள்ளப்படும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக குறித்த போதகர் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார். 

கடந்த 9 மாதங்களாக யாழ்ப்பாண ஆதீன செயற்குழு மற்றும் நிதிக்குழு கூட்டப்படாமல் நிதி பயன்படுத்தப்படுகின்றமை மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் அழுத்தங்களை கொடுத்து வந்த நிலையில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவரை திருச்சபை யாப்புக்கு விரோதமாக இடைநிறுத்தியமை, ஊழியர்களிற்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் தலைமையேற்று குறித்த போதகர் செயற்பட்டுள்ளார்.

மேற்படி, தென்னிந்திய திருச்சபையின் முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவியிலிருந்துகொண்டு செயற்பட்டு வந்த நிலையில், கடந்த 2ம் திகதி அவரது பொறுப்பில் இருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இச்சம்பவமானது பேராயர், செயலாளர் ஆகியோரின் வழிநடத்தலில் நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சூழலில்தான் பேராயர் பத்மதயாளன் தலைமையில் நடைபெற்ற போதகர்களுடனான கலந்துரையாடலில் பல்வேறு விடயங்களை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், குறித்த கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறிய சூழலில், பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான போதகர் பேராயருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, தாக்குதல் மேற்கொண்ட நபர் போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று தடவை தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன்போது, குறித்த போதகரின் மகனை மற்றுமொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபரின் தந்தையான தென்னிந்திய திருச்சபையின் செயலாளர் போதகர் சதீஸ் டானியல் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுக்காது இருந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, குறித்த தாககுதலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இன்றுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றமை தொடர்பிலும், கடந்த மூன்று வருடங்களிற்கு மேலாக நிதி முறைகேடுகள் இடம்பெற்ற வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், தெளிவான கணக்குகள் காட்டப்படவில்லை எனவும் தென்னிந்திய திருச்சபை மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 

இந்த சூழலில் 96 லட்சம் பெறுமதியான கார் ஒன்று திருச்சபை நிர்வாகிகள் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான போதகர் உள்ளிட்ட பலர் மேற்குறித்த விடயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், இத்தாக்குதல் சம்பவமானது திருச்சபை போதகர்கள் மற்றும் திருச்சபை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாக்குதலை மேற்கொண்ட நபர் தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் உறுப்பினராக இருந்து மீளவும் தென்னிந்திய திருச்சபையில் திருச்சபை பாரம்பரியங்கள் பேணப்படாது இணைந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தில் உள்ள CSIMLA சமூகம் தென்னிந்திய திருச்சபை செனட் மகா சபையின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் மீதான தாக்குதலுக்கு தமிழக MLA சமூகம் செனட் மகா சபையிடம் முறைப்பாடு தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் மீதான தாக்குதலுக்கு தமிழக MLA சமூகம் செனட் மகா சபையிடம் முறைப்பாடு செய்யள்ளது.தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் வணக்கத்துக்குரிய அன்டனி செபஸ்டியன் மீது நேற்று வெள்ளிக்கிழமை கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான போதகர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தென்னிந்தி திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக போதகர் செபஸ்டியன் அன்டனி கடந்த வருடம் டிசம்பர் மாதம் கவுன்சிலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு பல்வேறு விடயங்களில் இப்போதகர் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில், தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளரான சதீஸ் டானியல் அவர்களின் மகனால் குறித்த போதகர் தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் நடைபெறும் போது, தாக்குதல் மேற்கொண்ட நபரின் தந்தையான JDCSI செயலாளர் போதகர் சதீஸ் டானியல், பேராயர் ஆகியோர் தடுக்காது இருந்தமை தொடர்பில் போதகர்கள் மற்றும் விசுவாசிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.தாக்குதலுக்குள்ளான போதகரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் பொதகர் குடும்பங்களிற்கான குடும்ப ஒன்றுகூடலும், வழிநடத்தல் தொடர்பான பயிற்சிகளும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இறுதி நாளான நேற்றைய தினமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போதகர்களிற்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, போதகர்களின் ஓய்வூதியம், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, நிகழ்வு நடைபெற்று வந்த பகுதியில் தரித்திருந்த தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளரின் மகன் போதகரின் பின் தலைப்பகுதியில் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் காணப்படும் நிர்வாக குறைபாடுகள், நிதி முறைகேடுகள், திருச்சபை மக்கள் மீது மேற்கொள்ளப்படும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக குறித்த போதகர் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார். கடந்த 9 மாதங்களாக யாழ்ப்பாண ஆதீன செயற்குழு மற்றும் நிதிக்குழு கூட்டப்படாமல் நிதி பயன்படுத்தப்படுகின்றமை மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் அழுத்தங்களை கொடுத்து வந்த நிலையில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவரை திருச்சபை யாப்புக்கு விரோதமாக இடைநிறுத்தியமை, ஊழியர்களிற்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் தலைமையேற்று குறித்த போதகர் செயற்பட்டுள்ளார்.மேற்படி, தென்னிந்திய திருச்சபையின் முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவியிலிருந்துகொண்டு செயற்பட்டு வந்த நிலையில், கடந்த 2ம் திகதி அவரது பொறுப்பில் இருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இச்சம்பவமானது பேராயர், செயலாளர் ஆகியோரின் வழிநடத்தலில் நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த சூழலில்தான் பேராயர் பத்மதயாளன் தலைமையில் நடைபெற்ற போதகர்களுடனான கலந்துரையாடலில் பல்வேறு விடயங்களை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், குறித்த கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறிய சூழலில், பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தாக்குதலுக்குள்ளான போதகர் பேராயருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, தாக்குதல் மேற்கொண்ட நபர் போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று தடவை தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன்போது, குறித்த போதகரின் மகனை மற்றுமொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபரின் தந்தையான தென்னிந்திய திருச்சபையின் செயலாளர் போதகர் சதீஸ் டானியல் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுக்காது இருந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, குறித்த தாககுதலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இன்றுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றமை தொடர்பிலும், கடந்த மூன்று வருடங்களிற்கு மேலாக நிதி முறைகேடுகள் இடம்பெற்ற வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், தெளிவான கணக்குகள் காட்டப்படவில்லை எனவும் தென்னிந்திய திருச்சபை மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இந்த சூழலில் 96 லட்சம் பெறுமதியான கார் ஒன்று திருச்சபை நிர்வாகிகள் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதலுக்குள்ளான போதகர் உள்ளிட்ட பலர் மேற்குறித்த விடயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், இத்தாக்குதல் சம்பவமானது திருச்சபை போதகர்கள் மற்றும் திருச்சபை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாக்குதலை மேற்கொண்ட நபர் தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் உறுப்பினராக இருந்து மீளவும் தென்னிந்திய திருச்சபையில் திருச்சபை பாரம்பரியங்கள் பேணப்படாது இணைந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தில் உள்ள CSIMLA சமூகம் தென்னிந்திய திருச்சபை செனட் மகா சபையின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement