• Apr 28 2025

அலிபாபாக்களின் பிடிக்குள் சிக்கியுள்ள தமிழரசுக் கட்சி;வெளியேற்றப்படவுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள்-சிவமோகன் பகிரங்கம்

Sharmi / Apr 28th 2025, 2:54 pm
image

இலங்கை தமிழரசு கட்சியானது அலிபாபாவின் கையிலும் அவரோடு சேர்ந்த 19 திருடர்களின் கையில் மாட்டியுள்ளதாகவும்  கட்சிக்குள் புதிய சூழ்ச்சிகள் அரங்கேற்ற காத்திருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின பின் யாரும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில் விடப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழரசுக் கட்சி தான் ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஈழ விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு கட்சி. ஆனால் துரதிஸ்டவசமாக அக் கட்சி இக்கட்டில் சிக்கியுள்ளது.

இன்று கட்சியின் பொதுக்குழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமையால் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கட்சியானது அலிபாவாவின் கையிலும், அவருடன் சேர்ந்த 19 திருடர்களின் கையிலும் மாட்டிக் கொண்டுள்ளது.

இந்த அலிபாவாவும் 19 திருடர்களும் மனம் மாற வேண்டும். தமிழரசுக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் அலிபாவாக்கள் அதிலிருந்து விலக வேண்டும். அப்படி இருந்தால் தான் அடுத்த கட்ட நகர்வைப் பற்றிய சிந்தனையில் நாம் செல்லக் கூடியதாக இருக்கும்.

வழக்கு போட்டது யார் என்பது இருக்க அதை எய்தவன் யார் என பார்க்க வேண்டும். அம்பையும் தெரியும். எய்த சுத்துமாத்து யார் என்பதை தேர்தலுக்கு முன் மக்கள் அடையாளம் காண வேணடும். தமிழரசுக் கட்சி தான் வெல்ல வேண்டும் என்பது உண்மை.

ஆனால் அவர்கள் வென்று எதையும் சாதிக்கப் போவதில்லை. இன்றைய நிலைமையில் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொளளும் தற்காலிக வெற்றி அதனை நிரந்த அழிவில் கொண்டு சென்று நிறுத்தும். இது தான் உண்மை நிலைப்பாடு.

தமிழரசுக் கட்சியில் புதிய சூழ்ச்சிகள் இன்று ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. அவை அரங்கேற்றக் காத்திருக்கின்றது.

எமது கட்சியில் பொதுக் குழுவில் 326 உறுப்பினர்கள். 57 பிரதேச சபை அல்லது பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட எமது தொகுதிக் குழுக்களில் இருந்து 285 பேரும் மத்திய குழுவில் 46 பேரும் என 326 பேர் உள்ளனர்.

அண்மையில் சிறிதரன் கூட ஒரு அறிவிப்பை விட்டிருந்தார். அண்மையில் சிறிதரன் அவர்கள் இந்த 36 பேருடன் மீண்டும் ஒரு தெரிவை செய்து உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.

ஆனால் இப்போது இருக்கும் சுத்துமாத்து 161 பேர் தான் பொதுக் குழுவில் இருக்கலாம் என கூறுகிறார்கள். அப்படி எனில் 165 பேர் பொதுக் குழுவில் இருந்து வெளியேற்றப்படப் போகிறார்கள். இதைக் கூட தமிழரசுக் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் தெரியாமல் கண் மூடி மௌனியாக இருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாது தாங்கள் வெளியேற்றப்பட போகின்றார்கள் என்று. முல்லைத்தீவில் 25 பேர் பொதுக் குழுவில் இருக்கிறார்கள்.

வவுனியாவில் 20 பேர் வரையில் இருக்கிறார்கள். 70 பேருக்கு  மேல் பொதுக் குழுவில் வன்னிப் பிரதேசத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தற்போதைய நிலவரப்படி வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என்பவற்றுக்கு 5 பேர் வீதம் 15 பேர் தான் வரலாம் என்கிறார்கள். தங்களது சுயநலத்திற்காக இதை உருவாக்கியுள்ளார்கள். இது பற்றி கேள்வி கேட்க யாருக்காவது தகுதி இருக்கா?

இவையெல்லாம் தேர்தல் பிரச்சார மேடையில் வரும் போது கேட்கப்பட வேணடிய கேள்விகள். பொதுகுழுவில் இருக்கும் 326 பேருடன் கட்சியை ஏற்றுக் கொளளப் போகின்றீர்களா அல்லது உங்களது எண்ணங்களின அடிப்படையில் 161 பேரை தான் ஏற்கப் போறீங்களா என தமிழரசுக் கட்சியை ஆதரிக்கும் அனைவருக்கும் கேட்கும் உரிமை உண்டு.

வன்னி மாவட்டத்தில் பொதுக் குழுவில் 70 பேருக்கு பதிலாக 15 பேரை தருகிறார்கள். அபபடியெனில் 55 பேர் இனி இல்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேர் உள்ளனர். அதில் 5 பேரை எடுத்தால் 15 பேர் இல்லை. யாழ் மாவட்டத்தில் மட்டும் 55 பேர் இருக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்? அப்போதுதான் சுத்துமாத்து  கூட செய்யலாம். வன்னியில் சுத்துமாத்து சரிவராது. வன்னியில் தமிழரசுக் கட்சி வளர மாவை சேனாதிராஜா ஐயா, சேவியர் குலநாயகம் ஐயா, கனகசபாவதி ஆகியோரே காரணம்.

ஒரு கட்சியை வளர்ப்பதற்காக செயற்பட்ட பின்னர் தற்போது குறுக்கு தனமான செயற்படுகிறார்கள். பதில், பதில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களின் பொட்டுக்கள்  வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைக்கு சஜித் பிரேதமாதாச  அவர்களை ஆதரித்தவர்கள் தேசியவாதிகள். ஆதரிக்காதவர்கள் தேசியவாதிகள் அல்ல என்ற எண்ணத்தில் செயற்படுகிறார்கள். சஜித்துக்கு போட்டவர்கள் போடட்டும், அரிநேந்திரன் அவர்களுடன் நின்றவர்கள் நிற்கட்டும் என விட்டிருக்கலாம். ஆனால் சஜித்தை ஆதரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெளிக்கின்றீர்கள் என்றால் உங்களது பின்புலம் என்ன என்ற கேள்வி கேட்டுத்தானே ஆக வேண்டும்.

உங்களது அடிமனதில்  உள்ளது தேசிய நீக்கம். அதற்காக கொண்டு வரப்பட்ட நீங்கள் கட்சியிலும் அதனை செய்யப் பார்க்கிறீர்கள்.

பதில், பதில் என வருபவர்களிடம் இது பற்றி கேட்க வேண்டும். அதற்குள் ஒரு கருநாகம் நின்று படம் எடுத்து ஆடுது.. பெட்டிப் பாம்புகள் எல்லாம் கீழே கிடந்து ஆடுது. இதுகளை கேட்க துணிவில்லாதவர்கள் கட்சியில் இருந்து கட்சி வளராது. முதலில் கருநாகங்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

பதில் தலைமையைப் பெற்றவர்கள் வெளியேற்றபட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழரசுக் கட்சி என்ன வெற்றியைப் பெற்றாலும் எதுவுமே நடகப்போவதில்லை.

யாழ் மண்ணில் ஒரு செத்த பாம்பு படமெடுத்து ஆடுது. மாவைக்கு தேசியப் பட்டியல் கொடுக்கக் கூடாது. அவருக்கு வயது கூடி விட்டது எனக் கூறி கொடுக்க முடியாது என்றார்கள். அந்த செத்த பாம்புக்கு தெரியாது தனக்கும் 80 தாண்டி விட்டது என்று. அதுவே இப்ப பதில் என்று வைத்துக் கொண்டு ஆடுது. இந்த தேர்தல் முடிய வேட்டியைக் கட்டிக் கொண்டு ஊருக்குள் போகமாட்டார்.

சுயநலத்திற்காக ஒரு தலைவரையே இறப்பு நிலைக்கு கொண்டு போய் சேர்த்த ஒரு கூட்டம. ஒரு சின்ன விட்டுக் கொடுப்பை செய்திருந்தால் இவ்வவு பிரச்சனையும் வந்திருக்காது.

தேசியம் என்றவர்களையும், கட்சியை வளர்த்தவர்களையும் வெளியேற்றிவிட்டு, அலிபாவாவுனம் 19 பேரும் நின்று கட்சியை நடத்த முடியும் என்றால் அது நடக்குமா? இதற்கு மக்கள் பதில் கொடுப்பார்கள்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவர்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். மாவை சேனாதிராஜாவின் நிலைப்பாடு தொடர்பில் பதில் வரும். உங்களது தேவைக்காக தேசியப் பட்டியலை திருடி வைத்துக் கொண்டு கட்சி நடத்துவோம் என சொல்ல முடியாது.

400 வாக்கு  எடுத்த தகுதியற்ற ஒருவர் தலைமை தாங்கி பிரேதேச சபை தேர்தலை கொண்டு சென்றால் என்ன நடக்கும். இவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.

முல்லைத்தீவில் போட்டியிடுபவர்கள் அங்கு கட்சி வளர்த்த மாவை ஐயா அல்லது சம்பந்தன் ஐயா, செல்வநாயகம் ஐயாவின் படத்தை போட்டிருக்கலாம். அதை விடுத்து கள்ளன் என விடுதலைப் புலிகளால் திரத்தப்பட்டவனை, சங்கத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்த ஒருவருயை படத்தை போட்டு தேர்தல் கேட்டால் எப்படி வெல்ல முடியும். ஆகவே காலம் பதில் சொல்லும் எனத் தெரிவித்தார்.


அலிபாபாக்களின் பிடிக்குள் சிக்கியுள்ள தமிழரசுக் கட்சி;வெளியேற்றப்படவுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள்-சிவமோகன் பகிரங்கம் இலங்கை தமிழரசு கட்சியானது அலிபாபாவின் கையிலும் அவரோடு சேர்ந்த 19 திருடர்களின் கையில் மாட்டியுள்ளதாகவும்  கட்சிக்குள் புதிய சூழ்ச்சிகள் அரங்கேற்ற காத்திருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின பின் யாரும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில் விடப்பட்டுள்ளது. உண்மையில் தமிழரசுக் கட்சி தான் ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஈழ விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு கட்சி. ஆனால் துரதிஸ்டவசமாக அக் கட்சி இக்கட்டில் சிக்கியுள்ளது.இன்று கட்சியின் பொதுக்குழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமையால் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்சியானது அலிபாவாவின் கையிலும், அவருடன் சேர்ந்த 19 திருடர்களின் கையிலும் மாட்டிக் கொண்டுள்ளது. இந்த அலிபாவாவும் 19 திருடர்களும் மனம் மாற வேண்டும். தமிழரசுக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் அலிபாவாக்கள் அதிலிருந்து விலக வேண்டும். அப்படி இருந்தால் தான் அடுத்த கட்ட நகர்வைப் பற்றிய சிந்தனையில் நாம் செல்லக் கூடியதாக இருக்கும்.வழக்கு போட்டது யார் என்பது இருக்க அதை எய்தவன் யார் என பார்க்க வேண்டும். அம்பையும் தெரியும். எய்த சுத்துமாத்து யார் என்பதை தேர்தலுக்கு முன் மக்கள் அடையாளம் காண வேணடும். தமிழரசுக் கட்சி தான் வெல்ல வேண்டும் என்பது உண்மை. ஆனால் அவர்கள் வென்று எதையும் சாதிக்கப் போவதில்லை. இன்றைய நிலைமையில் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொளளும் தற்காலிக வெற்றி அதனை நிரந்த அழிவில் கொண்டு சென்று நிறுத்தும். இது தான் உண்மை நிலைப்பாடு.தமிழரசுக் கட்சியில் புதிய சூழ்ச்சிகள் இன்று ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. அவை அரங்கேற்றக் காத்திருக்கின்றது. எமது கட்சியில் பொதுக் குழுவில் 326 உறுப்பினர்கள். 57 பிரதேச சபை அல்லது பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட எமது தொகுதிக் குழுக்களில் இருந்து 285 பேரும் மத்திய குழுவில் 46 பேரும் என 326 பேர் உள்ளனர். அண்மையில் சிறிதரன் கூட ஒரு அறிவிப்பை விட்டிருந்தார். அண்மையில் சிறிதரன் அவர்கள் இந்த 36 பேருடன் மீண்டும் ஒரு தெரிவை செய்து உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.ஆனால் இப்போது இருக்கும் சுத்துமாத்து 161 பேர் தான் பொதுக் குழுவில் இருக்கலாம் என கூறுகிறார்கள். அப்படி எனில் 165 பேர் பொதுக் குழுவில் இருந்து வெளியேற்றப்படப் போகிறார்கள். இதைக் கூட தமிழரசுக் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் தெரியாமல் கண் மூடி மௌனியாக இருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாது தாங்கள் வெளியேற்றப்பட போகின்றார்கள் என்று. முல்லைத்தீவில் 25 பேர் பொதுக் குழுவில் இருக்கிறார்கள்.வவுனியாவில் 20 பேர் வரையில் இருக்கிறார்கள். 70 பேருக்கு  மேல் பொதுக் குழுவில் வன்னிப் பிரதேசத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தற்போதைய நிலவரப்படி வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என்பவற்றுக்கு 5 பேர் வீதம் 15 பேர் தான் வரலாம் என்கிறார்கள். தங்களது சுயநலத்திற்காக இதை உருவாக்கியுள்ளார்கள். இது பற்றி கேள்வி கேட்க யாருக்காவது தகுதி இருக்காஇவையெல்லாம் தேர்தல் பிரச்சார மேடையில் வரும் போது கேட்கப்பட வேணடிய கேள்விகள். பொதுகுழுவில் இருக்கும் 326 பேருடன் கட்சியை ஏற்றுக் கொளளப் போகின்றீர்களா அல்லது உங்களது எண்ணங்களின அடிப்படையில் 161 பேரை தான் ஏற்கப் போறீங்களா என தமிழரசுக் கட்சியை ஆதரிக்கும் அனைவருக்கும் கேட்கும் உரிமை உண்டு.வன்னி மாவட்டத்தில் பொதுக் குழுவில் 70 பேருக்கு பதிலாக 15 பேரை தருகிறார்கள். அபபடியெனில் 55 பேர் இனி இல்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேர் உள்ளனர். அதில் 5 பேரை எடுத்தால் 15 பேர் இல்லை. யாழ் மாவட்டத்தில் மட்டும் 55 பேர் இருக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம் அப்போதுதான் சுத்துமாத்து  கூட செய்யலாம். வன்னியில் சுத்துமாத்து சரிவராது. வன்னியில் தமிழரசுக் கட்சி வளர மாவை சேனாதிராஜா ஐயா, சேவியர் குலநாயகம் ஐயா, கனகசபாவதி ஆகியோரே காரணம்.ஒரு கட்சியை வளர்ப்பதற்காக செயற்பட்ட பின்னர் தற்போது குறுக்கு தனமான செயற்படுகிறார்கள். பதில், பதில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களின் பொட்டுக்கள்  வெளிப்படுத்தப்பட வேண்டும்.இன்றைக்கு சஜித் பிரேதமாதாச  அவர்களை ஆதரித்தவர்கள் தேசியவாதிகள். ஆதரிக்காதவர்கள் தேசியவாதிகள் அல்ல என்ற எண்ணத்தில் செயற்படுகிறார்கள். சஜித்துக்கு போட்டவர்கள் போடட்டும், அரிநேந்திரன் அவர்களுடன் நின்றவர்கள் நிற்கட்டும் என விட்டிருக்கலாம். ஆனால் சஜித்தை ஆதரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெளிக்கின்றீர்கள் என்றால் உங்களது பின்புலம் என்ன என்ற கேள்வி கேட்டுத்தானே ஆக வேண்டும். உங்களது அடிமனதில்  உள்ளது தேசிய நீக்கம். அதற்காக கொண்டு வரப்பட்ட நீங்கள் கட்சியிலும் அதனை செய்யப் பார்க்கிறீர்கள்.பதில், பதில் என வருபவர்களிடம் இது பற்றி கேட்க வேண்டும். அதற்குள் ஒரு கருநாகம் நின்று படம் எடுத்து ஆடுது. பெட்டிப் பாம்புகள் எல்லாம் கீழே கிடந்து ஆடுது. இதுகளை கேட்க துணிவில்லாதவர்கள் கட்சியில் இருந்து கட்சி வளராது. முதலில் கருநாகங்கள் வெளியேற்றப்பட வேண்டும். பதில் தலைமையைப் பெற்றவர்கள் வெளியேற்றபட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழரசுக் கட்சி என்ன வெற்றியைப் பெற்றாலும் எதுவுமே நடகப்போவதில்லை.யாழ் மண்ணில் ஒரு செத்த பாம்பு படமெடுத்து ஆடுது. மாவைக்கு தேசியப் பட்டியல் கொடுக்கக் கூடாது. அவருக்கு வயது கூடி விட்டது எனக் கூறி கொடுக்க முடியாது என்றார்கள். அந்த செத்த பாம்புக்கு தெரியாது தனக்கும் 80 தாண்டி விட்டது என்று. அதுவே இப்ப பதில் என்று வைத்துக் கொண்டு ஆடுது. இந்த தேர்தல் முடிய வேட்டியைக் கட்டிக் கொண்டு ஊருக்குள் போகமாட்டார்.சுயநலத்திற்காக ஒரு தலைவரையே இறப்பு நிலைக்கு கொண்டு போய் சேர்த்த ஒரு கூட்டம. ஒரு சின்ன விட்டுக் கொடுப்பை செய்திருந்தால் இவ்வவு பிரச்சனையும் வந்திருக்காது. தேசியம் என்றவர்களையும், கட்சியை வளர்த்தவர்களையும் வெளியேற்றிவிட்டு, அலிபாவாவுனம் 19 பேரும் நின்று கட்சியை நடத்த முடியும் என்றால் அது நடக்குமா இதற்கு மக்கள் பதில் கொடுப்பார்கள்.யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவர்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். மாவை சேனாதிராஜாவின் நிலைப்பாடு தொடர்பில் பதில் வரும். உங்களது தேவைக்காக தேசியப் பட்டியலை திருடி வைத்துக் கொண்டு கட்சி நடத்துவோம் என சொல்ல முடியாது. 400 வாக்கு  எடுத்த தகுதியற்ற ஒருவர் தலைமை தாங்கி பிரேதேச சபை தேர்தலை கொண்டு சென்றால் என்ன நடக்கும். இவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.முல்லைத்தீவில் போட்டியிடுபவர்கள் அங்கு கட்சி வளர்த்த மாவை ஐயா அல்லது சம்பந்தன் ஐயா, செல்வநாயகம் ஐயாவின் படத்தை போட்டிருக்கலாம். அதை விடுத்து கள்ளன் என விடுதலைப் புலிகளால் திரத்தப்பட்டவனை, சங்கத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்த ஒருவருயை படத்தை போட்டு தேர்தல் கேட்டால் எப்படி வெல்ல முடியும். ஆகவே காலம் பதில் சொல்லும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement