திருகோணமலை மாவட்டம், மூதூரில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறும் அராஜகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"மூதூர் மதுபானசாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது இரவோடிரவாகத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக மூதூர் பொலிஸார் இரவு வேளைகளில் திட்டமிட்டு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இரவு வேளை என்பதால் ஆதாரமின்றி முறைகேடுகளில் ஈடுபடுவதும் அச்சுறுத்துவதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறலாகும்.
தமிழ் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மதுபானசாலை மூடப்பட வேண்டும்." - என்றார்.
மூதூரில் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் அராஜகம் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் திருகோணமலை மாவட்டம், மூதூரில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறும் அராஜகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"மூதூர் மதுபானசாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது இரவோடிரவாகத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக மூதூர் பொலிஸார் இரவு வேளைகளில் திட்டமிட்டு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இரவு வேளை என்பதால் ஆதாரமின்றி முறைகேடுகளில் ஈடுபடுவதும் அச்சுறுத்துவதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறலாகும்.தமிழ் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மதுபானசாலை மூடப்பட வேண்டும்." - என்றார்.