• Feb 08 2025

மலையக மக்கள் தொடர்பில் இந்திய தூதுவருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட சந்திப்பு

Chithra / Feb 8th 2025, 12:47 pm
image



இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு நேற்று கொழும்பில் சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பில், இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு  மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை வலியுறுத்தினோம் என  மனோ கணேசன் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில்,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், ஜம்முவின சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்திய தரப்பில் தூதுவருடன், அரசியல் துறை இரண்டாம் செயலாளர் அசோக் குமாரும் கலந்து கொண்டார்.

மலையக மக்கள் தொடர்பில் இந்திய தூதுவருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட சந்திப்பு இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு நேற்று கொழும்பில் சந்தித்துள்ளது.இந்த சந்திப்பில், இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு  மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை வலியுறுத்தினோம் என  மனோ கணேசன் தெரிவித்தார். இந்த சந்திப்பில்,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், ஜம்முவின சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய தரப்பில் தூதுவருடன், அரசியல் துறை இரண்டாம் செயலாளர் அசோக் குமாரும் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement