• Nov 22 2024

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் சூழ்ச்சித்தனமானது- யோதிலிங்கம் தெரிவிப்பு

Sharmi / Sep 2nd 2024, 4:04 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழரசுக்  கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம் சூழ்ச்சித்தனமானது என அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாவுக்கு தமிழரசு கட்சியினர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில்  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே  சி.அ.யோதிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது.

அதாவது எதிர்வரும் தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு வழங்குவது,  தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் அரியநேந்திரன் அதிலிருந்து விலகவேண்டும், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற தீர்மானங்களே எடுக்கப்பட்டது.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை மத்திய குழு தனித்து எடுக்கலாமா? என்ற கேள்வி எழுகின்றது.

கட்சியின் முக்கிய தீர்மானங்களை  பொதுச்சபையே எடுக்க முடியும் என்பதுடன் அதனை மத்திய குழு எடுக்க முடியாது.

அதேவேளை மத்திய குழுவில் தலைவரும் இருக்கவில்லை முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த தீர்மானத்தை சுமந்திரன் சூழ்ச்சித்தனமாக தான் எடுத்திருக்கின்றார் என தான் கூறவேண்டும்.

அதேவேளை  சமஸ்டியை ஆதரிப்போருக்குதான் எமது ஆதரவு என முன்னைய கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அவ்வாறெனில் சஜித் சமஸ்டியை ஏற்றுக்கொண்டாரா? எனவும் கேள்வியெழுப்பினார்.

அதேவேளை மக்கள் மடையர்கள் என இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றார்களா?

இவர்கள் தமிழ் மக்களுக்கான தலைவர்களாக இருக்க தகுதியானவர்களா? எனவும் கேள்வியெழுப்பினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் இவ் விடயத்தில் கவனமாக நன்கு புரிந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு தயங்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

















தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் சூழ்ச்சித்தனமானது- யோதிலிங்கம் தெரிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழரசுக்  கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம் சூழ்ச்சித்தனமானது என அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.சஜித் பிரேமதாவுக்கு தமிழரசு கட்சியினர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில்  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே  சி.அ.யோதிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது.அதாவது எதிர்வரும் தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு வழங்குவது,  தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் அரியநேந்திரன் அதிலிருந்து விலகவேண்டும், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற தீர்மானங்களே எடுக்கப்பட்டது.சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை மத்திய குழு தனித்து எடுக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது.கட்சியின் முக்கிய தீர்மானங்களை  பொதுச்சபையே எடுக்க முடியும் என்பதுடன் அதனை மத்திய குழு எடுக்க முடியாது.அதேவேளை மத்திய குழுவில் தலைவரும் இருக்கவில்லை முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கவில்லை.இந்நிலையில் குறித்த தீர்மானத்தை சுமந்திரன் சூழ்ச்சித்தனமாக தான் எடுத்திருக்கின்றார் என தான் கூறவேண்டும்.அதேவேளை  சமஸ்டியை ஆதரிப்போருக்குதான் எமது ஆதரவு என முன்னைய கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.அவ்வாறெனில் சஜித் சமஸ்டியை ஏற்றுக்கொண்டாரா எனவும் கேள்வியெழுப்பினார்.அதேவேளை மக்கள் மடையர்கள் என இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றார்களாஇவர்கள் தமிழ் மக்களுக்கான தலைவர்களாக இருக்க தகுதியானவர்களா எனவும் கேள்வியெழுப்பினார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,தமிழ் மக்கள் இவ் விடயத்தில் கவனமாக நன்கு புரிந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு தயங்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement