பயங்கரவாத தடைச் சட்டத்தை நாம் ஆட்சிக்கு வந்தால் நீக்குவோம் என குறிப்பிட்ட ஒரே ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரம் தான்.
என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் தெரிவித்தார்.
மூதூரில் இன்று திங்கட்கிழமை (11) வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை மாவட்டத்தில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர்.
சிறுபான்மை பிரதிநிதித்துவம் விளக்கப்படுகிறது அதனால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவிக்கின்றனர்.
இனவாத ரீதியாக கலவரங்கள் ஏற்பட்ட போது அதற்காக குரல் கொடுத்த கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது.
தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் முஸ்லிம் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்காது.அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்குகிற கட்சியாகும்.இனவாத கருத்துக்களை பரப்புகின்ற அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளனர்.
நீங்கள் அவ்வாறு பாராளுமன்றம் செல்ல நினைத்தால் அது சாத்தியமாகாது.
தமிழ் முஸ்லிம் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை அதிகப்படியாக தேசிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.
அந்த குழப்பத்தில் தான் வீடு வீடாக சென்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என இனவாத கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
இம்முறை அதிகப்படியான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளும்.
அதில் சிறுபான்மையினரும் இருப்பார்கள் ,தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
பயங்கரவாத சட்டத்தை நீக்குவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தே.ம.ச குறிப்பிட்டுள்ளது - கே. எம். சப்றான் பயங்கரவாத தடைச் சட்டத்தை நாம் ஆட்சிக்கு வந்தால் நீக்குவோம் என குறிப்பிட்ட ஒரே ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரம் தான். என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் தெரிவித்தார்.மூதூரில் இன்று திங்கட்கிழமை (11) வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை மாவட்டத்தில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர்.சிறுபான்மை பிரதிநிதித்துவம் விளக்கப்படுகிறது அதனால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவிக்கின்றனர்.இனவாத ரீதியாக கலவரங்கள் ஏற்பட்ட போது அதற்காக குரல் கொடுத்த கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது.தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் முஸ்லிம் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்காது.அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்குகிற கட்சியாகும்.இனவாத கருத்துக்களை பரப்புகின்ற அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளனர்.நீங்கள் அவ்வாறு பாராளுமன்றம் செல்ல நினைத்தால் அது சாத்தியமாகாது.தமிழ் முஸ்லிம் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை அதிகப்படியாக தேசிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.அந்த குழப்பத்தில் தான் வீடு வீடாக சென்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என இனவாத கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.இம்முறை அதிகப்படியான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளும். அதில் சிறுபான்மையினரும் இருப்பார்கள் ,தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.