• May 07 2024

கடும் வெயிலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை: சர்ச்சையை சிக்கிய ஆசிரியரின் செயல்

Chithra / Mar 3rd 2024, 12:47 pm
image

Advertisement

 

கொழும்பு - நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் உள்ள மாணவர்கள் வெயிலில் மண்டியிடும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாடசாலை ஆசிரியை ஒருவரின் கட்டளைக்கு இணங்கவே மாணவர்கள் இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

மாணவர்கள் மண்டியிடும் இடத்தில் ஆசிரியரும் நிற்பதும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

"இது போன்ற செயலை நான் ஏற்கவில்லை. மேலும், இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதன் தாக்கம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில், அனைத்து பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. 

மேலும், கல்வி அதிகாரிகளால் இதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடும் வெயிலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை: சர்ச்சையை சிக்கிய ஆசிரியரின் செயல்  கொழும்பு - நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் உள்ள மாணவர்கள் வெயிலில் மண்டியிடும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.பாடசாலை ஆசிரியை ஒருவரின் கட்டளைக்கு இணங்கவே மாணவர்கள் இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .மாணவர்கள் மண்டியிடும் இடத்தில் ஆசிரியரும் நிற்பதும் பதிவாகியுள்ளது.இதேவேளை, இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,"இது போன்ற செயலை நான் ஏற்கவில்லை. மேலும், இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதன் தாக்கம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.இந்நிலையில், அனைத்து பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. மேலும், கல்வி அதிகாரிகளால் இதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement