• Nov 17 2024

பட்டப்படிப்பை முடிக்க தயாரான யுவதி விபத்தில் சிக்கி பரிதாப மரணம்

Chithra / Jun 9th 2024, 7:51 am
image


கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதி  மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் நேற்றுமுன்தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த யுவதியின் நாயும் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

குறித்த யுவதி  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவி என்றும், 

இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க தயாராகியிருந்தார் என கூறப்படுகிறது.

உயிரிழந்தவரது சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

கேகாலை பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பட்டப்படிப்பை முடிக்க தயாரான யுவதி விபத்தில் சிக்கி பரிதாப மரணம் கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதி  மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் நேற்றுமுன்தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த பெண் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த யுவதியின் நாயும் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.குறித்த யுவதி  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவி என்றும், இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க தயாராகியிருந்தார் என கூறப்படுகிறது.உயிரிழந்தவரது சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,கேகாலை பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement