தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவிற்கான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து முறைப்பாடளித்தும் இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமான நிலையில் கேள்வி மீதான வாக்கெடுப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலை தெல்லிப்பழை வைத்தியசாலை மட்டுமே. எனவே இந்த வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவின் பொறுப்பு வைத்தியராக கடமை புரியும் வைத்தியர் கிருசாந்தி வைத்தியசாலை தொடர்பான தனிப்பட்ட பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
இது தொடர்பில் முறைப்பாடளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பாதுகாப்பு அமைச்சர்,
இது தொடர்பில் பதிலளிப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் கோரியதோடு, அவரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸில் அல்லது சி.ஐ.டிக்கு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை வழங்கினால், எதிர்வரும் இரண்டு நாட்களுக்குக்குள் தான் பதில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய்ப்பிரிவில் பண மோசடிகள்; முறைப்பாடளித்தும் ஏன் நடவடிக்கை இல்லை அர்ச்சுனா எம்.பி கேள்வி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவிற்கான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து முறைப்பாடளித்தும் இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமான நிலையில் கேள்வி மீதான வாக்கெடுப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கு மாகாணத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலை தெல்லிப்பழை வைத்தியசாலை மட்டுமே. எனவே இந்த வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவின் பொறுப்பு வைத்தியராக கடமை புரியும் வைத்தியர் கிருசாந்தி வைத்தியசாலை தொடர்பான தனிப்பட்ட பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இது தொடர்பில் முறைப்பாடளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப்பாதுகாப்பு அமைச்சர், இது தொடர்பில் பதிலளிப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் கோரியதோடு, அவரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸில் அல்லது சி.ஐ.டிக்கு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை வழங்கினால், எதிர்வரும் இரண்டு நாட்களுக்குக்குள் தான் பதில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.