புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை, கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (06) அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் அறிவித்தார்.
மேலும், கட்டுமானத் துறைக்கு அவசியமான மணல், கற்கள் போன்ற மூலப்பொருட்களுக்கு இந்த தடை பொருந்தாது.
இல்மனைட், ரூடைல், சிர்கோன், கார்னட் போன்ற கனிய மணல்களுக்கான ஆய்வு மற்றும் அகழ்வு உரிமங்களும் புதிய கொள்கை வெளியாகும் வரை நிறுத்தப்பட்டுள்ளன.
உரிமச் செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாகவும், சட்டவிரோத அகழ்வுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதியின் அனுமதியுடன் உடனடி சுற்றிவளைப்பு பிரிவு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
புதிய தேசிய கனிமக் கொள்கை வரை கனரக கனிம அகழ்வு உரிமங்களுக்கு தற்காலிக தடை புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை, கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். நேற்று (06) அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் அறிவித்தார். மேலும், கட்டுமானத் துறைக்கு அவசியமான மணல், கற்கள் போன்ற மூலப்பொருட்களுக்கு இந்த தடை பொருந்தாது. இல்மனைட், ரூடைல், சிர்கோன், கார்னட் போன்ற கனிய மணல்களுக்கான ஆய்வு மற்றும் அகழ்வு உரிமங்களும் புதிய கொள்கை வெளியாகும் வரை நிறுத்தப்பட்டுள்ளன. உரிமச் செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாகவும், சட்டவிரோத அகழ்வுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதியின் அனுமதியுடன் உடனடி சுற்றிவளைப்பு பிரிவு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்