• Mar 05 2026

நெல்லியடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக் கட்டிடம் திறப்பு

Aathira / Feb 7th 2026, 8:35 am
image

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக் கட்டிடம் நேற்று (06) பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. 

பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரவெட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், நாடா வெட்டி வங்கிக் கட்டிடத்தை திறந்து வைத்து வங்கி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி, சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள், வங்கி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நெல்லியடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக் கட்டிடம் திறப்பு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக் கட்டிடம் நேற்று (06) பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரவெட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், நாடா வெட்டி வங்கிக் கட்டிடத்தை திறந்து வைத்து வங்கி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி, சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள், வங்கி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement