இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75 சதவீதம் என்ற நிலையிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலைமை உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், பல்வேறு வழிகளில் இலங்கை பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2026 ஜூன் மாதத்தில் இலங்கையின் பொதுப் பணவீக்கம் ஆண்டடிப்படையில் 6.8% ஆக அதிகரித்துள்ளதுடன், இதற்கு பிரதானமாக உள்நாட்டு எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றமே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியான தகவல் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75 சதவீதம் என்ற நிலையிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இந்நிலைமை உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், பல்வேறு வழிகளில் இலங்கை பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.2026 ஜூன் மாதத்தில் இலங்கையின் பொதுப் பணவீக்கம் ஆண்டடிப்படையில் 6.8% ஆக அதிகரித்துள்ளதுடன், இதற்கு பிரதானமாக உள்நாட்டு எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றமே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.