• Jul 05 2026

மானிப்பாய் குப்பை மேடு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்

Aathira / Jul 4th 2026, 10:48 am
image

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சீரான கழிவு தரம்பிரிப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இம்முறை கழிவுப் பொருட்கள் முறையாக தரம்பிரிக்கப்படாததாலேயே தீ ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குப்பை மேடு குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், அடிக்கடி துர்நாற்றம், புகை மற்றும் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

பிரதேச சபை சரியான முறையில் பராமரிக்காததால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மானிப்பாய் குப்பை மேடு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம் மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.தீ விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்களில் சீரான கழிவு தரம்பிரிப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.ஆனால் இம்முறை கழிவுப் பொருட்கள் முறையாக தரம்பிரிக்கப்படாததாலேயே தீ ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.குப்பை மேடு குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், அடிக்கடி துர்நாற்றம், புகை மற்றும் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேச சபை சரியான முறையில் பராமரிக்காததால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement