• Nov 25 2024

ஆயுதமேந்திய தரப்பினரால் பதற்றம் - ஹெய்ட்டியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Mar 21st 2024, 12:04 pm
image


ஹெய்ட்டியில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

ஹெய்ட்டியின் தலைநகரமான போட் ஒ பிரின்ஸின் பல வீதிகளில் ஆயுதமேந்திய தரப்பினர் தாக்குதல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அந்த தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஹெய்ட்டியில் உள்ள இலங்கையர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் தொடர்ந்தும் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் மீது கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதமேந்திய தரப்பினரால் பதற்றம் - ஹெய்ட்டியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் ஹெய்ட்டியில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.ஹெய்ட்டியின் தலைநகரமான போட் ஒ பிரின்ஸின் பல வீதிகளில் ஆயுதமேந்திய தரப்பினர் தாக்குதல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்தநிலையில், அந்த தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இந்தநிலையில், ஹெய்ட்டியில் உள்ள இலங்கையர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் தொடர்ந்தும் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் மீது கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement