• May 01 2024

யாழ் பல்கலையில் ஆரம்பமான இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு...!

Sharmi / Mar 21st 2024, 12:52 pm
image

Advertisement

'இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்' எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு இன்றையதினம்(21) காலை ஆரம்பமானது.

யாழ் பல்கலையின் இந்துக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இம் மாநாடு இடம்பெறுகின்றது.

இம் மாநாட்டின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா கலந்து கொண்டதுடன் குறித்த மாநாட்டில் 54 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்து கற்கைகள் பீட சபையின் ஏகோபித்த ஆதரவுடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக இருந்து தேகாந்த நிலையை அடைந்த அமரர் கு.நகுலேஸ்வர குருக்களுக்கு மெய்ப்பொருள் விருதும், சைவ சமூக பணியாற்றும் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகனுக்கு ஞானவாய்ச்சியன் விருதும், இலங்கையில் இந்து பண்பாட்டுக்கு உழைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு சிவநிதி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டில் இந்த ஆய்வு மாநாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலையில் ஆரம்பமான இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு. 'இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்' எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு இன்றையதினம்(21) காலை ஆரம்பமானது.யாழ் பல்கலையின் இந்துக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இம் மாநாடு இடம்பெறுகின்றது.இம் மாநாட்டின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா கலந்து கொண்டதுடன் குறித்த மாநாட்டில் 54 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.இந்து கற்கைகள் பீட சபையின் ஏகோபித்த ஆதரவுடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக இருந்து தேகாந்த நிலையை அடைந்த அமரர் கு.நகுலேஸ்வர குருக்களுக்கு மெய்ப்பொருள் விருதும், சைவ சமூக பணியாற்றும் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகனுக்கு ஞானவாய்ச்சியன் விருதும், இலங்கையில் இந்து பண்பாட்டுக்கு உழைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு சிவநிதி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டில் இந்த ஆய்வு மாநாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement