• Sep 20 2024

கொழும்பில் இன்று பயங்கரம் - ஒருவர் வெட்டிக்கொலை..! samugammedia

Chithra / Apr 23rd 2023, 3:58 pm
image

Advertisement

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் இன்று (23.04.2023) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இருவரும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த சஜித் மதுசங்க (34) என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலில் காயமடைந்த 53 வயதுடைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தெனியாய பொரலுவாய பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தாக்குதல் நடத்திய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் உயிரிழந்தவரின் உறவினர் எனவும், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மிரிஹான பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


கொழும்பில் இன்று பயங்கரம் - ஒருவர் வெட்டிக்கொலை. samugammedia மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் இன்று (23.04.2023) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.தாக்குதலுக்குள்ளான இருவரும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த சஜித் மதுசங்க (34) என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தாக்குதலில் காயமடைந்த 53 வயதுடைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தெனியாய பொரலுவாய பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை தாக்குதல் நடத்திய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் சந்தேகநபர் உயிரிழந்தவரின் உறவினர் எனவும், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மிரிஹான பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement