குருணாகல் - வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த மகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான மகள் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இரத்தினபுரி -டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று கைதுசெய்யப்பட்டதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
74 வயதுடைய மாமியாரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் பயங்கரம்; தாயை கொடூரமாக கொன்ற மகள் மாமியாரை கழுத்து நெரித்து கொன்ற மருமகன் குருணாகல் - வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த மகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான மகள் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதேவேளை இரத்தினபுரி -டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று கைதுசெய்யப்பட்டதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.74 வயதுடைய மாமியாரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபரான 29 வயதுடைய மருமகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.