மியான்மரில் சைபர் கிரைம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாடு திரும்புவது தொடர்பாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கும், ஜனாதிபதி சட்டத்தரணியும் வெளிவிவகார அமைச்சருக்குமான அலி சப்ரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் 56 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மியன்மார் அரசாங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இது தொடர்பான வசதிகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியான்மரில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர தாய்லாந்து ஆதரவு மியான்மரில் சைபர் கிரைம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாடு திரும்புவது தொடர்பாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கும், ஜனாதிபதி சட்டத்தரணியும் வெளிவிவகார அமைச்சருக்குமான அலி சப்ரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இரு தரப்பினருக்கும் இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் 56 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மியன்மார் அரசாங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இதன்படி குறித்த நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, இது தொடர்பான வசதிகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.