தனது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இன்று (21) அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார். காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் அவர் அரசியலில் பிரவேசித்தார்.
அவர் 2004, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியை தெரிவித்ததுடன் ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் தெரிவித்திருந்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இன்று (21) அறிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார். காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் அவர் அரசியலில் பிரவேசித்தார்.அவர் 2004, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியை தெரிவித்ததுடன் ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் தெரிவித்திருந்தார்