• Sep 20 2024

தலவாக்கலை மண், ஒரு அரசியல் மண் என்பதை நிரூபித்துள்ளது – திலகர் பெருமிதம்

Chithra / Feb 6th 2023, 7:19 pm
image

Advertisement

தலவாக்கலை மண், ஒரு அரசியல் மண் என்பதை சுதந்திர இலங்கையில் இருந்தே நிரூபித்து வந்துள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம்  திலகராஜா தெரிவித்துள்ளார்.

1947 ஆம் ஆண்டு தலவாக்கலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவி வேலுப்பிள்ளையைத் தொடர்ந்து,  1994 ஆம் ஆண்டு அண்ணன் சந்திரசேகரன் தனித்துவமாக போட்டியிட்டு நாடாளுமன்ற சென்ற வரலாற்று மண் தலவாக்கலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்ணில் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இளைஞர் நாடாளுமன்றில் அங்கம் வகித்த இளைஞர் ரமேஸ் அரவிந்தன் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவே வரும் ஆற்றல் கொண்டவர். 

அதற்கு ஒரு முன்னோட்டமாக கொட்டகலை பிரதேசசபை உறுப்பினராக  மட்டுமல்ல பிரதேச சபைத் தலைவராகவே அவரை அமரச் செயவதற்கு அரங்கம் ஆவலாக இருக்கிறது. 

அதற்கு தலவாக்கலை பிரதேச மக்கள் தமது வாக்குகளால் ஆதரவு வழங்க வேண்டும் என மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கு கூம்வுட் வட்டாரத்தில் தராசு போட்டியிடும் ரமேஸ் அரவிந்தன், சிவலிங்கம் தயானி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தலவாக்கலை மண், ஒரு அரசியல் மண் என்பதை நிரூபித்துள்ளது – திலகர் பெருமிதம் தலவாக்கலை மண், ஒரு அரசியல் மண் என்பதை சுதந்திர இலங்கையில் இருந்தே நிரூபித்து வந்துள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம்  திலகராஜா தெரிவித்துள்ளார்.1947 ஆம் ஆண்டு தலவாக்கலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவி வேலுப்பிள்ளையைத் தொடர்ந்து,  1994 ஆம் ஆண்டு அண்ணன் சந்திரசேகரன் தனித்துவமாக போட்டியிட்டு நாடாளுமன்ற சென்ற வரலாற்று மண் தலவாக்கலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மண்ணில் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இளைஞர் நாடாளுமன்றில் அங்கம் வகித்த இளைஞர் ரமேஸ் அரவிந்தன் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவே வரும் ஆற்றல் கொண்டவர். அதற்கு ஒரு முன்னோட்டமாக கொட்டகலை பிரதேசசபை உறுப்பினராக  மட்டுமல்ல பிரதேச சபைத் தலைவராகவே அவரை அமரச் செயவதற்கு அரங்கம் ஆவலாக இருக்கிறது. அதற்கு தலவாக்கலை பிரதேச மக்கள் தமது வாக்குகளால் ஆதரவு வழங்க வேண்டும் என மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.கொட்டகலை பிரதேச சபைக்கு கூம்வுட் வட்டாரத்தில் தராசு போட்டியிடும் ரமேஸ் அரவிந்தன், சிவலிங்கம் தயானி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement