• Nov 19 2024

கட்சிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி - அஷ்ரப் தாஹிர்

Tharmini / Nov 16th 2024, 11:37 am
image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்காக,

உழைத்த பத்து வேட்பாளர்களுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்  போராளிகள்  ஆதரவாளர்கள் அனைவருக்கும்.

கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவருமான அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

2024 நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் வெள்ளிக்கிழமை (15) இரவு பொதுமக்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் தற்காலிகமாக 2024 நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் தனது வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முதன்மை வேட்பாளரும் வெற்றியடைந்து புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அஷ்ரப் தாஹிர் ஆதரவாளர்களால் மாலை அணிவிக்கப்பட்டு நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

மேலும் அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடி பின்னர் கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசணத்தை பெற்றுக்கொள்வதற்காக உழைத்த பத்து வேட்பாளர்களுக்கும்  கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்  போராளிகள்  ஆதரவாளர்கள் அனைவருக்கும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.




கட்சிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி - அஷ்ரப் தாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்காக, உழைத்த பத்து வேட்பாளர்களுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்  போராளிகள்  ஆதரவாளர்கள் அனைவருக்கும். கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவருமான அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.2024 நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் வெள்ளிக்கிழமை (15) இரவு பொதுமக்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அத்துடன் அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் தற்காலிகமாக 2024 நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் தனது வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முதன்மை வேட்பாளரும் வெற்றியடைந்து புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அஷ்ரப் தாஹிர் ஆதரவாளர்களால் மாலை அணிவிக்கப்பட்டு நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார்.மேலும் அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடி பின்னர் கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசணத்தை பெற்றுக்கொள்வதற்காக உழைத்த பத்து வேட்பாளர்களுக்கும்  கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்  போராளிகள்  ஆதரவாளர்கள் அனைவருக்கும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement