• Sep 20 2024

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய ஆண்கள் பாடசாலையின் 138வது ஆண்டு விழா!

Chithra / Jan 11th 2023, 6:36 pm
image

Advertisement

1884 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது இஸ்லாமிய ஆண்கள் பாடசாலையான ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் 138வது ஆண்டு விழா நிகழ்வுகள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்களிப்புடன் நேற்றைய தினம் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் ஏ.கே.டி. அதாஹன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்விற்கு, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் மற்றும் தொழிலதிபர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள்  பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்த கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாடசாலையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்து தருவதாக உறுதியளித்ததோடு, மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களையும் வழங்கி வைத்தார். 

மேலும், பரிசில்களை வழங்கி உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,

விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் இப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானமொன்று இல்லாத பெருங் குறையை கல்வியமைச்சு தீர்க்கவேண்டும் என்றார்.


இலங்கையின் முதலாவது இஸ்லாமிய ஆண்கள் பாடசாலையின் 138வது ஆண்டு விழா 1884 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது இஸ்லாமிய ஆண்கள் பாடசாலையான ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் 138வது ஆண்டு விழா நிகழ்வுகள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்களிப்புடன் நேற்றைய தினம் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஏ.கே.டி. அதாஹன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்விற்கு, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் மற்றும் தொழிலதிபர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள்  பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்த கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாடசாலையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்து தருவதாக உறுதியளித்ததோடு, மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களையும் வழங்கி வைத்தார். மேலும், பரிசில்களை வழங்கி உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் இப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானமொன்று இல்லாத பெருங் குறையை கல்வியமைச்சு தீர்க்கவேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement