• Nov 22 2024

சங்கிலியனின் 405 ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு...!

Sharmi / May 31st 2024, 1:35 pm
image

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 405 ஆவது நினைவு தினம் யாழில் இன்று(31) நினைவுகூரப்பட்டது.

இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலைமையில், யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான  ஆறு.திருமுருகன்,  யாழ் மாநகர ஆணையாளர்,  சமய பெரியோர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சங்கிலியன் மன்னனினால் கட்டப்பட்ட யமுனா ஏரியிலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,  இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட யமுனைநதி தீர்த்தமும் இதன்போது தெளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















சங்கிலியனின் 405 ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு. யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 405 ஆவது நினைவு தினம் யாழில் இன்று(31) நினைவுகூரப்பட்டது.இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலைமையில், யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான  ஆறு.திருமுருகன்,  யாழ் மாநகர ஆணையாளர்,  சமய பெரியோர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனை தொடர்ந்து சங்கிலியன் மன்னனினால் கட்டப்பட்ட யமுனா ஏரியிலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,  இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட யமுனைநதி தீர்த்தமும் இதன்போது தெளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement