• Sep 17 2024

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Aug 16th 2024, 9:08 am
image

Advertisement

ஓகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/39 ஆம் இலக்க அதிவிசேடவர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் கொழும்பு துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2387/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனம் (கூட்டிணைத்தல்)தனியார் உறுப்பினர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக பிரேரிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியல் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்புவேளையின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு. ஓகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/39 ஆம் இலக்க அதிவிசேடவர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் கொழும்பு துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2387/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனம் (கூட்டிணைத்தல்)தனியார் உறுப்பினர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக பிரேரிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியல் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்புவேளையின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement