அதிகாரத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் தேசிய மக்கள் சக்தி இன்று அரசியல் விலைமாதுவாகியுள்ளது. குண்டர் கும்பலை உள்ளுராட்சிசபைகளுக்கு அனுப்பி அராஜகத்திலும் ஈடுபடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் கூறத்தொடங்கிய பொய்களை உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வரையும் தொடர்ந்து அவற்றின் மூலம் மக்களை ஏமாற்றியிருக்கின்றனர்.
அன்று தொண்டமான் ஊழல்வாதியென்று கடுமையாக விமர்சித்தனர். ஆனால் நுவரெலியாவில் ஆட்சியமைப்பதற்கு தொண்டமான் குழுவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர்.
அதேபோன்று தான் தெற்கு மற்றும் கிழக்கில் ரிஷாத் பதியுதீன் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவற்றுக்கு அப்பால் ஒரு படி மேல் சென்று குண்டர்களை அனுப்பி அராஜகத்திலும் ஈடுபடுகின்றனர்.
சபை உறுப்பினர்களைத் தவிர அவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு வேறு யாருக்கு அதிகாரமிருக்கிறது?
முடிந்தால் இவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சவால் விடுக்கின்றோம்.
பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதாகக் கூறினர். ஆனால் இன்று பாதாள உலகக் குழு அரசாங்கத்துக்கு உதவுகிறது.
ஜே.வி.பி.யையும் வன்முறையையும் பிரிக்க முடியாது. என்றார்.
குண்டர்களை அனுப்பி அராஜகத்தில் ஈடுபடும் அநுர அரசு - பகிரங்க சவால் விடுத்த பிரதான எதிர்க்கட்சி அதிகாரத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் தேசிய மக்கள் சக்தி இன்று அரசியல் விலைமாதுவாகியுள்ளது. குண்டர் கும்பலை உள்ளுராட்சிசபைகளுக்கு அனுப்பி அராஜகத்திலும் ஈடுபடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஜனாதிபதித் தேர்தலில் கூறத்தொடங்கிய பொய்களை உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வரையும் தொடர்ந்து அவற்றின் மூலம் மக்களை ஏமாற்றியிருக்கின்றனர். அன்று தொண்டமான் ஊழல்வாதியென்று கடுமையாக விமர்சித்தனர். ஆனால் நுவரெலியாவில் ஆட்சியமைப்பதற்கு தொண்டமான் குழுவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். அதேபோன்று தான் தெற்கு மற்றும் கிழக்கில் ரிஷாத் பதியுதீன் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இவற்றுக்கு அப்பால் ஒரு படி மேல் சென்று குண்டர்களை அனுப்பி அராஜகத்திலும் ஈடுபடுகின்றனர். சபை உறுப்பினர்களைத் தவிர அவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு வேறு யாருக்கு அதிகாரமிருக்கிறது முடிந்தால் இவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சவால் விடுக்கின்றோம்.பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதாகக் கூறினர். ஆனால் இன்று பாதாள உலகக் குழு அரசாங்கத்துக்கு உதவுகிறது.ஜே.வி.பி.யையும் வன்முறையையும் பிரிக்க முடியாது. என்றார்.