• Sep 30 2025

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்; மன்னாரில் நடந்த பயங்கரம்

Chithra / Sep 29th 2025, 8:16 am
image


தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று  சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய W.M.A. சரத் அந்தோனி  என தெரிய வந்துள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி  நேற்று காலை பயணித்த குறித்த ரயில் காலை சௌத் பார் ரயில் நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.

இதன் போது சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் ரயிலில் 

மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டார்.

மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்; மன்னாரில் நடந்த பயங்கரம் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று  சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய W.M.A. சரத் அந்தோனி  என தெரிய வந்துள்ளது.தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி  நேற்று காலை பயணித்த குறித்த ரயில் காலை சௌத் பார் ரயில் நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.இதன் போது சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டார்.மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement