• Apr 15 2026

வயலுக்கு வரம்பு கட்டச் சென்றவர் சடலமாக மீட்பு; திடீரென மயங்கி விழுந்த பெண் பலி! யாழில் அடுத்தடுத்து துயரம்

Chithra / Sep 29th 2025, 8:23 am
image

யாழில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியைச் சேர்ந்த தியாகராசா பிரேமநளினி என்ற 46 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் அவருக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு கொண்டு சென்றவேளை அவர் மயக்கமுற்றதாகவும் பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை யாழில் வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்த  60 வயதுடைய சின்னத்தம்பி ராஜபாரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் அரியாலை - நாவலடி பகுதியில் கமம் செய்து வந்ததாகவும்  நேற்றுமுன்தினம் காலை வரம்பு கட்டுவதற்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்றுமுன்தினம் இரவு வரை அவர் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றனர்.

இதன்போது அவர் அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெளி ஒன்றில் சடலமாக காணப்பட்டார்.

இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்

வயலுக்கு வரம்பு கட்டச் சென்றவர் சடலமாக மீட்பு; திடீரென மயங்கி விழுந்த பெண் பலி யாழில் அடுத்தடுத்து துயரம் யாழில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியைச் சேர்ந்த தியாகராசா பிரேமநளினி என்ற 46 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் அவருக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அங்கு கொண்டு சென்றவேளை அவர் மயக்கமுற்றதாகவும் பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை யாழில் வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்த  60 வயதுடைய சின்னத்தம்பி ராஜபாரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் அரியாலை - நாவலடி பகுதியில் கமம் செய்து வந்ததாகவும்  நேற்றுமுன்தினம் காலை வரம்பு கட்டுவதற்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் இரவு வரை அவர் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றனர்.இதன்போது அவர் அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெளி ஒன்றில் சடலமாக காணப்பட்டார்.இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்

Advertisement

Advertisement

Advertisement