விஜயின் பிரச்சாரத்தில் சிக்கிக் காயமடைந்த சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதறியோடிய ஆம்புலன்ஸை தமிழக வெற்றிக்கழக கும்பல் என்று சொல்லிக்கொண்டு ஒரு குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து இதுவரையில் 39 பேர் உயிரிழந்துள்ளளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்டத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் சிறுவனை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அந்த சிறுவன் யார் என்று தெரியவில்லை. தூக்கிக்கொண்டு போகும் அந்த நபருக்கும் தெரியவில்லை. எனினும் நெஞ்சம் பதைபதைக்க எப்படியாவது சிறுவனைக் காப்பாற்றிவிட மாட்டோமா என மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.
இவ்வாறு பதறிச்சென்ற ஆம்புலன்ஸ் வண்டியை தமிழக வெற்றிக்கழகம் என்ற போர்வையில் ஒரு கும்பல தாக்கியுள்ளது.
பதறியோடிய ஆம்புலன்ஸை அந்தக் கும்பல் தாக்கும் காணொளி தற்போது வெளிவந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்; பதறியோடிய ஆம்புலன்ஸை தாக்கிய த.வெ.க கும்பல் விஜயின் பிரச்சாரத்தில் சிக்கிக் காயமடைந்த சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதறியோடிய ஆம்புலன்ஸை தமிழக வெற்றிக்கழக கும்பல் என்று சொல்லிக்கொண்டு ஒரு குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து இதுவரையில் 39 பேர் உயிரிழந்துள்ளளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் சிறுவனை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அந்த சிறுவன் யார் என்று தெரியவில்லை. தூக்கிக்கொண்டு போகும் அந்த நபருக்கும் தெரியவில்லை. எனினும் நெஞ்சம் பதைபதைக்க எப்படியாவது சிறுவனைக் காப்பாற்றிவிட மாட்டோமா என மருத்துவமனை நோக்கி விரைந்தனர். இவ்வாறு பதறிச்சென்ற ஆம்புலன்ஸ் வண்டியை தமிழக வெற்றிக்கழகம் என்ற போர்வையில் ஒரு கும்பல தாக்கியுள்ளது. பதறியோடிய ஆம்புலன்ஸை அந்தக் கும்பல் தாக்கும் காணொளி தற்போது வெளிவந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துச் செல்கின்றன.