பொது போக்குவரத்தான புகையிரதப் பயணம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த காணொளியில், புகையிரதத்தின் உள்ளே தரையில் சிந்தியிருந்த தண்ணீரைக் கவனித்த சிறுவன், தனது புத்தகப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து, அந்த இடத்தை சுத்தம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.
குறித்த சிறுவனின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காணொளியில் காணப்படும் சிறுவனின் பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் அனைவரினாலும் பாராட்டத்தக்தொன்றாகவுள்ளது.
சிறு வயதிலேயே இவ்வாறான நற்பண்புகளை வெளிப்படுத்துவது, எதிர்கால சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
சாதாரணமாக சிறுவர்கள் மத்தியில் இத்தகைய நற்பண்புகளை வளர்ப்பது, தனிநபர் சுத்தம் மட்டுமன்றி, சமூக மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதற்கு இக்காணொளி எடுத்துகாட்டாகவுள்ளது.
குறித்த காணொளியை சிறுவனை பாராட்டி பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
திடீரென தன் பக்கம் கவனத்தை ஈர்த்த சிறுவன் -வயதில் சிறியவன் மனதால் உயர்ந்த தருணம் பொது போக்குவரத்தான புகையிரதப் பயணம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.குறித்த காணொளியில், புகையிரதத்தின் உள்ளே தரையில் சிந்தியிருந்த தண்ணீரைக் கவனித்த சிறுவன், தனது புத்தகப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து, அந்த இடத்தை சுத்தம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. குறித்த சிறுவனின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.காணொளியில் காணப்படும் சிறுவனின் பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் அனைவரினாலும் பாராட்டத்தக்தொன்றாகவுள்ளது.சிறு வயதிலேயே இவ்வாறான நற்பண்புகளை வெளிப்படுத்துவது, எதிர்கால சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.சாதாரணமாக சிறுவர்கள் மத்தியில் இத்தகைய நற்பண்புகளை வளர்ப்பது, தனிநபர் சுத்தம் மட்டுமன்றி, சமூக மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதற்கு இக்காணொளி எடுத்துகாட்டாகவுள்ளது.குறித்த காணொளியை சிறுவனை பாராட்டி பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.