தொலுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புபுரஸ்ஸ டேசன் தோட்டத்தில் உள்ள பல வீடுகள் நிலத்திற்குள் சரிந்து, வெடித்து சேதமடைந்துள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 20 குடும்பங்கள் தற்போது டேசன் டெல்டா தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த மக்களின் பல வீடுகள் நிலத்திற்குள் சரிந்து, வெடித்து, சுவர்கள் இடிந்து, கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனுடன், புபுரஸ்ஸ முதல் புஸ்ஸல்ல வரை செல்லும் பிரதான வீதியும், அந்த பிரதான வீதியில் டேசன் தோட்டம் எனப்படும் பகுதியில், வீதி இரண்டாக வெடித்து நிலத்திற்குள் சரிந்துள்ளதால், இந்த பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.
இந்த பிரதான வீதி வெடித்து நிலத்திற்குள் சரிந்ததனால், அந்தப் பகுதி மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வீதிக்கு இதுவரை எந்தவிதமான பராமரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்கின்றனர்.
புபுரஸ்ஸ டேசன் தோட்டத்தில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - சிரமத்தில் மக்கள் தொலுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புபுரஸ்ஸ டேசன் தோட்டத்தில் உள்ள பல வீடுகள் நிலத்திற்குள் சரிந்து, வெடித்து சேதமடைந்துள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 20 குடும்பங்கள் தற்போது டேசன் டெல்டா தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்த மக்களின் பல வீடுகள் நிலத்திற்குள் சரிந்து, வெடித்து, சுவர்கள் இடிந்து, கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.இதனுடன், புபுரஸ்ஸ முதல் புஸ்ஸல்ல வரை செல்லும் பிரதான வீதியும், அந்த பிரதான வீதியில் டேசன் தோட்டம் எனப்படும் பகுதியில், வீதி இரண்டாக வெடித்து நிலத்திற்குள் சரிந்துள்ளதால், இந்த பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.இந்த பிரதான வீதி வெடித்து நிலத்திற்குள் சரிந்ததனால், அந்தப் பகுதி மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வீதிக்கு இதுவரை எந்தவிதமான பராமரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்கின்றனர்.