• Nov 25 2024

மொட்டு மீண்டும் மலரும் ...! புதிய தேர்தல் வியூகங்களுடன் வெற்றிவாகை சூடுவோம்...!சாகர சூளுரை...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 1:03 pm
image

எதிர்வரும் தேர்தலை மிகவும் வலுவாக எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று(20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வாரம் எங்கள் கட்சியின் மாநாட்டை நடத்தினோம். இலங்கை வரலாற்றில் இவ்வளவு வெற்றிகரமான கட்சி மாநாடு நடந்ததில்லை. எனவே எமது கட்சியினர் இந்த நாட்டுக்கு பாரிய செய்தியை வழங்கியுள்ளனர். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் இந்த நாட்டில் மிகப் பெரிய கட்சியாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகவும், நம்பர் ஒன் கட்சியாகவும் இருக்கிறது என்பதே அந்த செய்தி. 

ஒரு கட்சியாக நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒரு கட்சி என்ற வகையில் எதிர்வரும் தேர்தலை மிகவும் வலுவாக எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எந்தத் தேர்தலாக இருந்தாலும், அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற இப்போது தயாராக இருக்கிறோம்.

இந்நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்து வருகின்றது. VAT காரணமாக இந்நாட்டு மக்களுக்கு பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதை ஒரு கட்சியாக நாம் இந்த நாட்டுக்கு வழங்க எதிர்பார்க்கவில்லை. மஹிந்தவின் சிந்தனை மற்றும் சுபீட்ச நோக்கு மூலம் நாம் இந்த நாட்டிற்கு வழங்கியதை இன்று இந்த நாடு பெற்றுக் கொண்டிருக்கவில்லை. 

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை. ஒரு கட்சி என்ற ரீதியில் இந்த விடயங்களுக்கெல்லாம் 100 வீதம் ஒத்துப் போகவில்லை, ஆனால் கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இந்த நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. 

எனவே, இந்த நிலையில் இருந்து தலைமை தாங்குவதற்கு ஒரு கட்சி என்ற வகையில் தேவையான பலம் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது. சில விடயங்களில் முழுமையான உடன்பாடு இல்லை என்பதை ஒரு கட்சியாக நாங்கள் அறிவிக்கிறோம்.

இங்குள்ள மிகவும் துரதிஷ்டமான நிலை என்னவெனில், அண்மையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இலங்கையின் வரி குறைக்கப்பட்டு இந்த நாட்டுக்கு கேடு விளைவித்துள்ளது என்பது ஒரு கூர்மையான பிரதான குற்றச்சாட்டு. 

மக்களின் வரிப்பணத்தை குறைப்பது தவறு என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தீர்மானம் எடுத்த போது, ​​பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் VAT-ஐ குறைக்கவும், வருமான வரியை குறைக்கவும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

இது விதியின் நகைச்சுவை. முன்னாள் ஜனாதிபதி வரியைக் குறைத்தமைக்காக வரியைக் குறைக்கக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதும் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதும் என்னவென்பதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் இது தொடர்பில் நாட்டுக்கு விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


மொட்டு மீண்டும் மலரும் . புதிய தேர்தல் வியூகங்களுடன் வெற்றிவாகை சூடுவோம்.சாகர சூளுரை.samugammedia எதிர்வரும் தேர்தலை மிகவும் வலுவாக எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று(20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த வாரம் எங்கள் கட்சியின் மாநாட்டை நடத்தினோம். இலங்கை வரலாற்றில் இவ்வளவு வெற்றிகரமான கட்சி மாநாடு நடந்ததில்லை. எனவே எமது கட்சியினர் இந்த நாட்டுக்கு பாரிய செய்தியை வழங்கியுள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் இந்த நாட்டில் மிகப் பெரிய கட்சியாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகவும், நம்பர் ஒன் கட்சியாகவும் இருக்கிறது என்பதே அந்த செய்தி. ஒரு கட்சியாக நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒரு கட்சி என்ற வகையில் எதிர்வரும் தேர்தலை மிகவும் வலுவாக எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எந்தத் தேர்தலாக இருந்தாலும், அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற இப்போது தயாராக இருக்கிறோம்.இந்நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்து வருகின்றது. VAT காரணமாக இந்நாட்டு மக்களுக்கு பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதை ஒரு கட்சியாக நாம் இந்த நாட்டுக்கு வழங்க எதிர்பார்க்கவில்லை. மஹிந்தவின் சிந்தனை மற்றும் சுபீட்ச நோக்கு மூலம் நாம் இந்த நாட்டிற்கு வழங்கியதை இன்று இந்த நாடு பெற்றுக் கொண்டிருக்கவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை. ஒரு கட்சி என்ற ரீதியில் இந்த விடயங்களுக்கெல்லாம் 100 வீதம் ஒத்துப் போகவில்லை, ஆனால் கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இந்த நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, இந்த நிலையில் இருந்து தலைமை தாங்குவதற்கு ஒரு கட்சி என்ற வகையில் தேவையான பலம் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது. சில விடயங்களில் முழுமையான உடன்பாடு இல்லை என்பதை ஒரு கட்சியாக நாங்கள் அறிவிக்கிறோம்.இங்குள்ள மிகவும் துரதிஷ்டமான நிலை என்னவெனில், அண்மையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இலங்கையின் வரி குறைக்கப்பட்டு இந்த நாட்டுக்கு கேடு விளைவித்துள்ளது என்பது ஒரு கூர்மையான பிரதான குற்றச்சாட்டு. மக்களின் வரிப்பணத்தை குறைப்பது தவறு என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தீர்மானம் எடுத்த போது, ​​பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் VAT-ஐ குறைக்கவும், வருமான வரியை குறைக்கவும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இது விதியின் நகைச்சுவை. முன்னாள் ஜனாதிபதி வரியைக் குறைத்தமைக்காக வரியைக் குறைக்கக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதும் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதும் என்னவென்பதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் இது தொடர்பில் நாட்டுக்கு விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement