• Sep 11 2025

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் கண்டுபிடிப்பு

Chithra / Sep 10th 2025, 9:27 am
image


பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது, ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வந்து காரை இங்கு விட்டுவிட்டு, சம்பத் மனம்பேரியிடம் கொடுக்குமாறு கூறிச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் கண்டுபிடிப்பு பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது, ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வந்து காரை இங்கு விட்டுவிட்டு, சம்பத் மனம்பேரியிடம் கொடுக்குமாறு கூறிச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement