மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி கோழையாக நடந்து கொண்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
90% சம்பள உயர்வின் பின்னர் மீண்டும் 70% சம்பள அதிகரிப்புக்கு மத்திய வங்கி அங்கீகாரம் வழங்காது என கம்மன்பில குறிப்பிட்டார்.
சம்பள அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்கு மத்திய வங்கி இரண்டு காரணங்களைக் கூறுவதாகவும் அந்த இரண்டு காரணங்களும் அடிப்படையற்றவை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சமீபத்திய சம்பள திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 70% அதிகரிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கியினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் சம்பள அதிகரிப்பு பற்றிய குற்றச்சாட்டுகளை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.
மக்களிடம் மத்தியவங்கி மன்னிப்புகோர வேண்டும். கம்மன்பில வலியுறுத்து மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி கோழையாக நடந்து கொண்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.90% சம்பள உயர்வின் பின்னர் மீண்டும் 70% சம்பள அதிகரிப்புக்கு மத்திய வங்கி அங்கீகாரம் வழங்காது என கம்மன்பில குறிப்பிட்டார்.சம்பள அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்கு மத்திய வங்கி இரண்டு காரணங்களைக் கூறுவதாகவும் அந்த இரண்டு காரணங்களும் அடிப்படையற்றவை எனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை சமீபத்திய சம்பள திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 70% அதிகரிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கியினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.குறித்த ஊடக அறிக்கையில் சம்பள அதிகரிப்பு பற்றிய குற்றச்சாட்டுகளை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.