• Sep 12 2025

அபிவிருத்தி வெற்றியளிக்க மத்திய அரசு, உள்ளூராட்சி நிறுவன ஒருங்கிணைப்பு அவசியம்! – ஜனாதிபதி

Chithra / Sep 12th 2025, 11:50 am
image

 

மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி வேகமடையும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான பூர்வாங்கக் கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், மத்திய வங்கி மற்றும் பல அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்தித் திட்டங்களில் மத்திய மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.


இதன்போது, வெளிநாட்டு கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இனி விசேட திட்ட அலுவலகங்கள் அமைக்கப்படாது என்றும், தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

பாடசாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை வலய மட்டத்தில் ஆராய்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசியல் நோக்கத்துக்காக உள்ளூராட்சி நிறுவனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் தற்போதைய அரசாங்கத்தில் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அபிவிருத்தித் திட்டத்தை நோக்கிச் செல்வதற்கான பொறுப்பை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அபிவிருத்தி வெற்றியளிக்க மத்திய அரசு, உள்ளூராட்சி நிறுவன ஒருங்கிணைப்பு அவசியம் – ஜனாதிபதி  மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி வேகமடையும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான பூர்வாங்கக் கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், மத்திய வங்கி மற்றும் பல அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்தித் திட்டங்களில் மத்திய மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.இதன்போது, வெளிநாட்டு கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இனி விசேட திட்ட அலுவலகங்கள் அமைக்கப்படாது என்றும், தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.பாடசாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை வலய மட்டத்தில் ஆராய்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.அரசியல் நோக்கத்துக்காக உள்ளூராட்சி நிறுவனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் தற்போதைய அரசாங்கத்தில் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அபிவிருத்தித் திட்டத்தை நோக்கிச் செல்வதற்கான பொறுப்பை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement