• Sep 10 2025

மோதலில் முடிந்த வாக்குவாதம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு!

shanuja / Sep 10th 2025, 4:40 pm
image

இரு தரப்பினரிடையே வாக்குவாதம்  ஏற்பட்டு மோதலாக மாறியதில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். 


இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு   இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்  அலாவுதீன் ரிஷாத் என்ற  29 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.  


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த நபருக்கும் அவருடைய முன் வீட்டில் வசித்து வந்த நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 


வாய்த்தர்க்கம் வலுப்பெற்று  மோதலாக  மாறியதில் கூறிய ஆயுதங்களினால்   தாக்கப்பட்டு குடும்பஸ்தர்  உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலை  உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விசேட தடயவியல் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மோதலில் முடிந்த வாக்குவாதம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு இரு தரப்பினரிடையே வாக்குவாதம்  ஏற்பட்டு மோதலாக மாறியதில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு   இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்  அலாவுதீன் ரிஷாத் என்ற  29 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபருக்கும் அவருடைய முன் வீட்டில் வசித்து வந்த நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் வலுப்பெற்று  மோதலாக  மாறியதில் கூறிய ஆயுதங்களினால்   தாக்கப்பட்டு குடும்பஸ்தர்  உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலை  உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விசேட தடயவியல் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement