வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா யாழ். தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இன்று(10) இடம் பெற்றது.
நிகழ்வில், நினைவரங்கு திறந்து வைக்கப்பட்டது. இன்றைய அரங்கு பிரபல நாதஸ்வர வித்துவான் கலாபூசணம் கே.எம்.பஞ்சாபிகேசன் அரங்காக அமைந்தது.
இதன் போது கலைஞர்கள் 'இளங்க கலைஞர் விருது' மற்றும் 'கலைச்சாகரம் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இளம் கலைஞர் விருதுகளை வல்லிபுரம் மதனபாபு, மகாலிங்கம் கேசரன், விக்னேஸ்வரன் ஜானுசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கலைச்சாகரம் விருதுகளை நமசிவாயம் விமலராசா, வேதசகாயம் டேவிட், சிவகுரு அழகேசன், யோகேஸ்வரி ஜெகதீஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் இடம்பெற்ற குறத்தி நடனம், முருகன் நடனம், இசைச் சங்கமம், பொம்மலாட்டம், கதாப்பிரசங்கம், கோலாட்டம், நாட்டிய நாடகம் ஆகிய கலை நிகழ்வுகள் சபையோரைக் கவர்ந்தன.
தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கராஜா காண்டீபன், யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம், கலாபூஷணம் சின்னகுட்டி காசிபிள்ளை, தென்மராட்சி கலாசார மண்டப தலைவர் அருள்நந்தி அருள்தாஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
தென்மராட்சி பிரதேச பண்பாட்டு திருவிழா வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா யாழ். தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இன்று(10) இடம் பெற்றது.நிகழ்வில், நினைவரங்கு திறந்து வைக்கப்பட்டது. இன்றைய அரங்கு பிரபல நாதஸ்வர வித்துவான் கலாபூசணம் கே.எம்.பஞ்சாபிகேசன் அரங்காக அமைந்தது.இதன் போது கலைஞர்கள் 'இளங்க கலைஞர் விருது' மற்றும் 'கலைச்சாகரம் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இளம் கலைஞர் விருதுகளை வல்லிபுரம் மதனபாபு, மகாலிங்கம் கேசரன், விக்னேஸ்வரன் ஜானுசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.கலைச்சாகரம் விருதுகளை நமசிவாயம் விமலராசா, வேதசகாயம் டேவிட், சிவகுரு அழகேசன், யோகேஸ்வரி ஜெகதீஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நிகழ்வில் இடம்பெற்ற குறத்தி நடனம், முருகன் நடனம், இசைச் சங்கமம், பொம்மலாட்டம், கதாப்பிரசங்கம், கோலாட்டம், நாட்டிய நாடகம் ஆகிய கலை நிகழ்வுகள் சபையோரைக் கவர்ந்தன.தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கராஜா காண்டீபன், யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம், கலாபூஷணம் சின்னகுட்டி காசிபிள்ளை, தென்மராட்சி கலாசார மண்டப தலைவர் அருள்நந்தி அருள்தாஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.