• Jan 30 2025

கிளீன் சிறிலங்கா திட்டம் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்- டி.வி.சானக வலியுறுத்து..!

Sharmi / Jan 29th 2025, 3:42 pm
image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்கள் மீது வெறுப்புணர்வை வைத்திருக்கக்கூடாது எனவும் மாறாக உண்மையான அமைப்பு மாற்றத்தைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

'சுத்தமான இலங்கை' திட்டம் தொடங்கப்பட்ட திகதி குறித்து ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த முரண்பாடான கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

"அரசாங்கம் முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளில் மாற்றியமைக்கப்பட்ட பாகங்களை அகற்றத் தொடங்கியுள்ளது. 

இருப்பினும், மக்கள் உண்மையான தூய்மைப்படுத்தலை விரும்புகிறார்கள். 

எனவே, 'சுத்தமான இலங்கை' திட்டம் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். 

அது அவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து தவறான கூற்றுக்களை வெளியிடுபவர்களை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிளீன் சிறிலங்கா திட்டம் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்- டி.வி.சானக வலியுறுத்து. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்கள் மீது வெறுப்புணர்வை வைத்திருக்கக்கூடாது எனவும் மாறாக உண்மையான அமைப்பு மாற்றத்தைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சுத்தமான இலங்கை' திட்டம் தொடங்கப்பட்ட திகதி குறித்து ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த முரண்பாடான கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினார்."அரசாங்கம் முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளில் மாற்றியமைக்கப்பட்ட பாகங்களை அகற்றத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மக்கள் உண்மையான தூய்மைப்படுத்தலை விரும்புகிறார்கள். எனவே, 'சுத்தமான இலங்கை' திட்டம் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். அது அவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து தவறான கூற்றுக்களை வெளியிடுபவர்களை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement