• May 19 2025

கடலுக்குள் செல்லும் இரணவில கடற்கரை கரையோர பகுதி! எடுக்கப்பட்ட நடவடிக்கை

Chithra / May 18th 2025, 12:16 pm
image

 

புத்தளம் - சிலாபம், இரணவில கடற்கரையின் 700 மீட்டர் பகுதி கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வின் போதே மேற்படி கடலரிப்பு தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவினர் சிலாபம், இரணவில கடற்கரையின் கடலரிப்பு பற்றி விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் என கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார்.

மேலும், இந்த கடலரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக மதிப்பிடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காலநிலை மாற்றம் இவ்வாறு கடலோர அரிப்பை பாதித்துள்ளது என்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெர்னி பிரதீப் குமார கூறினார்.

இவ்வாறு கடலரிப்புக்குள்ளான பகுதிகளுக்கு மணல் மூட்டைகள் போட்டு அரிப்பை மேலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடலுக்குள் செல்லும் இரணவில கடற்கரை கரையோர பகுதி எடுக்கப்பட்ட நடவடிக்கை  புத்தளம் - சிலாபம், இரணவில கடற்கரையின் 700 மீட்டர் பகுதி கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வின் போதே மேற்படி கடலரிப்பு தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி குழுவினர் சிலாபம், இரணவில கடற்கரையின் கடலரிப்பு பற்றி விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் என கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார்.மேலும், இந்த கடலரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக மதிப்பிடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காலநிலை மாற்றம் இவ்வாறு கடலோர அரிப்பை பாதித்துள்ளது என்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெர்னி பிரதீப் குமார கூறினார்.இவ்வாறு கடலரிப்புக்குள்ளான பகுதிகளுக்கு மணல் மூட்டைகள் போட்டு அரிப்பை மேலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement