• Oct 19 2024

பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசமைப்புப் பேரவை அங்கீகாரம்...!

Sharmi / Jul 12th 2024, 10:33 am
image

Advertisement

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமாஅதிபராக நியமிப்பதற்கு அரசமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசமைப்புப் பேரவை நேற்று(11)  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோதே இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசமைப்புப் பேரவையின் தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட் டுள்ளார்.

இதேவேளை, சட்டமா அதிபராகவிருந்த சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்த நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க அண்மையில் பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசமைப்புப் பேரவை அங்கீகாரம். ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமாஅதிபராக நியமிப்பதற்கு அரசமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.அரசமைப்புப் பேரவை நேற்று(11)  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோதே இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அரசமைப்புப் பேரவையின் தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட் டுள்ளார்.இதேவேளை, சட்டமா அதிபராகவிருந்த சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்த நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க அண்மையில் பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement