வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து யாழ். வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
யாழ். போதனா வைத்தியசாலை என்பது வட மாகாணத்தில் மிகப்பெரிய போதனா வைத்தியசாலை. இங்கு விபத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகும் நிலையில், அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக 16 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர்.
அதிலும் வட மாகாணத்தில் யாழ். மாகாணத்தில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றது என தெரிவித்தார்.
யாழில் அதிகரித்து வரும் விபத்துக்கள்; அவசர சிகிச்சைப் பிரிவுகளில் குவியும் நோயாளிகள். விடுக்கப்பட்ட எச்சரிக்கை வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து யாழ். வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.யாழ். போதனா வைத்தியசாலை என்பது வட மாகாணத்தில் மிகப்பெரிய போதனா வைத்தியசாலை. இங்கு விபத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகும் நிலையில், அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.குறிப்பாக 16 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர்.அதிலும் வட மாகாணத்தில் யாழ். மாகாணத்தில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றது என தெரிவித்தார்.